Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதர, சகோதரிகளை அழைப்பது குறித்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதென திவயின சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரட்ணம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான கடும் சுகவீனமுற்றிருக்கும் பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தமது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக தெரிவித்து அண்மையில் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் விடுத்திருந்தார்.

வல்வெட்டித்துறை பிரதேசத்தில் தலைவர் பிரபாகரனின் சகாக்களுடன் இவர்கள் சந்திப்பொன்றை நடத்தவிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இந்த இரகசிய திட்டத்தை அறிந்து கொண்ட அரசாங்கம் அனுமதி வழங்குவதனை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது சகோதரரை இலங்கை இராணுவத்தினரால் தொடக் கூட முடியாதென வினோதினி தெரிவித்திருந்ததாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

2 Responses to எனது தம்பியை (தமிழீழ தேசியத் தலைவர்) தொடக் கூட முடியாது: அக்கா வினோதினி

  1. இன்னமும் புலி அச்சத்துடனேயே வாழுகிறது சிங்களம் என்பதனை அறியமுடிகிறது. மனிதநேயமற்ற உணர்வுகள் அற்ற அரக்க குணம் படைதத சிங்கஇனவெறியருக்கு உறவுகளின் பாசம் எங்கே தெரியப் போகிறது? தலைவரை எந்த சக்தியாலும் செருங்கவோ தொடவோ முடியாது. இது அத்தனை தமிழரின் நம்பிக்கை.

     
  2. sathees Says:
  3. Nobody can touch my leader

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com