தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று கேட்ட போதே கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
விஜயகலா தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துவதாக சபாநாயகர் கூறியுள்ளதால், விசாரணைகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தை வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா பேச்சு; கருத்து வெளியிட முடியாது என கூட்டமைப்பு தெரிவிப்பு!