காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈபிடிபியினர்; தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து இன்று (02) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி தலைமை அலுவலகம் முன்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மிரட்டப்பட்டமை ஈபிடிபியின் கடந்த கால இருண்ட பக்கத்தை சொல்லி நிற்கின்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்திருந்த பதாகைகளை ஈபிடிபி கட்சியை சேர்ந்த ஒருவர் பறித்தெடுக்க முயற்சித்ததனையடுத்து அங்கு பதற்றம் நிலவியது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க முடியாதவாறு மிக சத்தமாக ஈபிடிபியினர் தமது கட்சி பாடல்களை ஒலிக்கவிட்டும், டக்ளஸ் தேவானந்தாவினுடைய உரையையும் ஒலிக்கவிட்டும் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர்.
அதேவேளை ஈழமக்கள் ஐனநாயகக் கட்சிக்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படடிருந்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பொது மக்களும் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.

0 Responses to மீண்டும் களமிறங்கும் ஈபிடிபி கும்பல்!