Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“வரவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருகின்றது. மலையகத்தில் போட்டியிடும் எண்ணம் ஏதும் எமக்கு இல்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதனை, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் வெளிப்படுத்தியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 10வது ஆண்டு நினைவுப் பேருரை, நேற்று புதன்கிழமை மாலை, ஹட்டனிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, வீ.இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொதுத் தேர்தலில் மலையகத்தில் போட்டியிடாது என கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான மாவை சேனாதிராஜா, என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது பற்றியே பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்தத் தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக அனைவரும் கலந்து பேசித் தீர்மானிக்கலாம் என்றும், மாவை சேனாதிராஜா என்னிடம் தெரிவித்தார்.” என்றுள்ளார்.

0 Responses to கொழும்பு, கம்பஹாவில் போட்டியிடவே ஆலோசனை; மாவை தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com