புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சிம்மாசன உரை நிகழ்த்தி ஜனாதிபதி கொள்கை அறிவிப்பை வெளிடவுள்ளார்.
இந்த நிலையில், இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசாங்கத் தரப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஊடகமொன்றுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேநேரம் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 Responses to கோட்டாவின் பாராளுமன்ற உரையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை: த.தே.கூ