Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது வியாபாரத்தை நடத்துவதற்காக சவேந்திரசில்வாவை ஒரு துரும்பாக அமெரிக்கா எடுத்து வைத்துள்ளதே தவிர இதில் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை தமது நாட்டுக்குள் நுழைய முடியாதபடி தடைவிதித்தமை அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையேயான பிரச்சனை.

வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் சொல்லைத்தான் அமெரிக்கா கேட்பதாக தென்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. மறுபுறமாக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய சில அரசியல் பிரமுகர்கள் ஏதோ தாம் சொல்லித்தான் அமெரிக்கா சவேந்திரசில்வாவுக்கு தடைவிதித்ததாக தமிழ் மக்களுக்கு பாவனை காட்டுகிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் -சிங்கள மக்கள் மத்தியில் நல்லுணர்வை ஏற்படுத்தாமல் பகைமை உணர்வை ஏற்படுத்தும் செயற்பாடு என நாம் கருதுகின்றோம்.

அமெரிக்கா தன்னுடைய வியாபாரத்தை எம்.சி.சி ஒப்பந்தம்,சோபா ஒப்பந்தம் , அக்சா ஒப்பந்தம் என பல ஒப்பந்தங்களை கையிலே வைத்துக் கொண்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தை ஏதோ ஒரு வகையில் மிரட்டிஅவற்றில் கையெழுத்து வாங்குவதற்கு.

எனவே அமெரிக்காவின் இந்த செயற்பாட்டால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டாது.

அமெரிக்காவின் இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டால் இங்குள்ள நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் அமெரிக்கா செல்ல ஒரேயடியாக விசா வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to சவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்? வெளியானது காரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com