வல்வெட்டித்துறை சிவன் கோயில் அறங்காவலரும் தேசிய தலைவரது சகோதரனுமான அருணாசலம் தியாகராஜா கடந்த 15ம் திகதி காலமாகியுள்ளார்.
இவர்,யாழ்ப்பாண அரசை போத்துக்கேய ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற இறுதிவரைக் களமாடிய போர் வீரர்கள் வழியில் வந்தவரும்,வல்வெட்டித்துறை சிவன் கோயில், பர்மா முருகன் கோயில் மற்றும் கொழும்பிலும் கோயில் கட்டிய புகழ்பெற்ற கடல் வணிகரான பெரியவர் என்று அழைக்கப்படும் திருமேனியாரின் கொள்ளுப்பேரனும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதியினரின் பெறா மகனும்,தேசியத் தலைவரின் ஒன்றவிட்ட சகோதரரும் ஆவார்.
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஆலயத் தொண்டிலும் அதன் வளர்ச்சியிலும் அர்ப்பணித்து வாழ்ந்த அமரர் தியாகராசா அவர்களிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேசியத் தலைவர் போராட்டத்துக்கு வந்திருக்காவிடின் அவரின் தமயனார் மனோகரனே வல்வெட்டித்துறை சிவன் கோயிலின் அறங்காவலராக வந்திருப்பார் என தெரியவருவதுடன், அப்பொறுப்பை ஏற்று நடத்துபவர்கள் அவர்களின் கொடை வள்ளல் தன்மையால் எஜமான் என்றே ஊர் மக்களால் அழைக்கப்படுகிறார்கள் என்றும் வல்வை ஆனந்தராஜ் தனது அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Our deepest condolences RIP