Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குறைந்தளவு வீரியம் கொண்ட அணுவாயுதங்களை பூமிக்கடியில் வெடிக்க வைத்து சீனா இரகசிய சோதனை நடத்தியிருக்கலாம் என அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜோர்னல் பத்திரிகை ஊகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பற்றிய உண்மைத் தகவல்களை ஆரம்பத்தில் சீனா மறைத்தது தான் இந்தளவு உயிர்ச் சேதத்துக்குக் காரணம் என அமெரிக்கா சீனாவைக் குற்றம் சாட்டி வரும் வேளையில் இந்நிகழ்வும் இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப் படுகின்றது.

ஆனால் அமெரிக்காவின் இச்செய்தியை மறுத்துரைத்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கருத்துத் தெரிவிக்கும் போது, 'அமெரிக்காவின் இக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது. சீனா எப்போதும் அணுசக்தி விவகாரத்தில் சர்வதேசத்துக்கு அளித்த வாக்கை மீறாமல் தான் நடந்து வருகின்றது.' என்றுள்ளார்.

1996 இல் அமெரிக்காவும், சீனாவும் மேற்கொண்ட அணுவாயுத ஒப்பந்தம் இரு நாடுகளாலும் இன்னும் அங்கீகரிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒப்பந்தம் இவ்வருடம் பெப்ரவரியுடன் காலாவதியும் ஆகியுள்ளது.

0 Responses to சீனா இரகசிய அணுவாயுதப் பரிசோதனை? : அமெரிக்கப் பத்திரிகை ஊகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com