Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சூடானில் 2018 ஆமாண்டு டிசம்பரில், விலைவாசி உயர்வு உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக பொது மக்களால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.

அங்கு 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த உமர் அல் பஷீர் இன் அரசு மக்களின் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. இதன்போது கைது செய்யப் பட்ட நூற்றுக் கணக்கான மக்களில் ஒருவரான அஹமது அல் காஹீர் என்ற ஒரு ஆசிரியையை இவ்வருடம் பெப்ரவரியில் சூடான் பாதுகாப்புப் படை படுகொலை செய்தது.

இதனால் போராட்டம் மேலும் தீவிரமானது. அதிபர் உமர் அல் பஷீர் இன் ஆட்சியைக் கலைத்து அவரை சிறையில் அடைத்த சூடான் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேலும் ஆசிரியை கொலை வழக்கும் நடைபெற்று வந்த நிலையில், இதன் இறுதி விசாரணை திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது குற்றம் நிரூபிக்கப் பட்ட 29 பாதுகாப்புப் படையினருக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளிக்கப் பட்டது.

மேலும் 13 பேருக்கு சிறைத் தண்டனையும் அளிக்கப் பட்டதுடன், 4 பேர் விடுதலையும் செய்யப் பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சூடானில் 29 துருப்புக்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com