வருமான வரித் திணைக்களம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்கரும்புலிகள் நடத்திய தாக்குதல்களினால் 104 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதென சிறிலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் இந்தத் தாக்குதல்களை நடத்தி வீரச்சாவடைந்தனர்.
வருமான வரித் திணைக்களத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு சுமார் 104 கோடி தேவைப்படுவதாகவும் தற்போது தற்காலிக கட்டடங்களில் இயங்கி வரும் வருமான வரித் திணைக்களத்திற்காக 21 கோடி ரூபா வாடகை செலுத்தப்பட்டுள்ளதெனவும் சிறிலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வான்கரும்புலிகள் இறுதியாக நடத்திய தாக்குதல்களினால் 104 கோடி நட்டம்: அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு
பதிந்தவர்:
தம்பியன்
10 July 2009
0 Responses to வான்கரும்புலிகள் இறுதியாக நடத்திய தாக்குதல்களினால் 104 கோடி நட்டம்: அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு