யாழ்ப்பாணம், வவுனியாவில் சட்டவிரோதமான ஆயுதக்குழுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளது.
யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அக்கட்சி ஆணையாளரிடம் கோரியுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகர சபைத் தேர்தல்கள் தொடர்பாக நேற்று புதன்கிழமை ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையிலான குழுவினர், தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. கூறியதாவது:
"யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளர்களின் போக்குவரத்து வசதிக்காக விமானப்படை ஹெலிக்கொப்டர்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தோம்.
அத்தோடு, சட்டவிரோதமான ஆயுதக்குழுக்களின் நடமாட்டங்கள் யாழ்ப்பாணம், வவுனியா பிரதேசங்களில் அதிகரித்துள்ளன. இதனால், வேட்பாளர்கள் தங்களின் சுதந்திரமான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது.
எனவே, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தவேண்டுமென்றால் இவ்வாறான சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தோம்.
வடக்கில், சட்டவிரோதமான ஆயுதக்குழுக்களின் நடமாட்டம், அச்சுறுத்தலாகவுள்ளது: ஐ.தே.க
பதிந்தவர்:
தம்பியன்
09 July 2009
0 Responses to வடக்கில், சட்டவிரோதமான ஆயுதக்குழுக்களின் நடமாட்டம், அச்சுறுத்தலாகவுள்ளது: ஐ.தே.க