Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

Viduthalaiஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ஆயுத தளவாட வாகனங்களை வழி மறித்து மறியல் செய்ததற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழக பெரம்பளூர் மாவட்டப் பொறுப்பாளர் இலட்சுமணனும் நேற்று முன்தினம் விடுதலை ஆனார்கள்.

கோவை நடுவண் சிறையிலிருந்த அவர்களை கடந்த 01.08.2009 அன்று காலை பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் தமிழுணர்வாளர்கள் பலர் சிறை வாயிலில் திரண்டிருந்து எழுச்சியோடு வரவேற்றார்கள்.

சிறையிலிருந்து விடுதலை ஆன இருவரும் கோவை காந்திபுரத்தில் இருந்த தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் படிப்பகம் சென்றனர். கட்சி அமைப்பு வேறுபாடின்றி அனைத்து தமிழுணர்வாளர்களும் சிறை வாயிலில் திரண்டிருந்தது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் ஈழத்துப் போராளிகளுக்கு உதவியதாக ஏற்கெனவே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர்.

Vi 1

Vi 2

Vi 3

0 Responses to சிறீலங்காவிற்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற வாகனங்களை தாக்கிய தமிழுணர்வாளர்கள் இராமகிருட்டிணன் இலட்சுமணன் விடுதலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com