Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

sweetdreams
காலம்வரும். தியாகத்தின் விதைகள் துளிர்விடும். பாலைவனத்தில் லீலி மலர்கள் பூப்பது போலவும் பாறை முகடுகளில் நீரூற்றுகள் பீறிடுவது போலும். ஈழம் மலரும். அதுவரை உண்மையின் முடிவிலா தன்மையை நம்புவோம். நீதியின் அடங்காத உயிர் துடிப்பை நம்புவோம்.

காங்கிரசோடும் உரையாட வேண்டும் என எழுதியதில் உணர்வாளர்கள் சிலருக்கு வருத்தம். இன அழித்தலை நடத்தியதே அக்கட்சியல்லவா, அவர்களுடன் என்ன உரையாடல் வேண்டிக் கிடக் கிறது என சிலர் கேட்டனர். ஐயமுறும் அன்பர்கள் அனைவருக்கும்: ""அர்த்தமுள்ள உரையாடல் உண் மைக்கு அப்பாற்பட்டதாய் இருக்க முடியாது. உரை யாடலின் அடிப்படையே உண்மையை தேடுவதும் நிலைநிறுத்துவதும்தான்''. அதற்கும் மேலாய் உரையாடல் போற்றுதற்குரிய ஜனநாயக வழிமுறை, பண்பான மனித நெறிமுறை.

ஈழத்தமிழ் மக்களின் நீண்ட அரசியல் உரிமைப் போராட்டத்தில் இந்தியா தொடர்பான முக்கிய உண்மைகள் இவை: 1970-களின் இறுதி யிலும், 1980-களிலும் இந்தியப் பெருங்கடல் பகுதி யில் அமெரிக்க மேலாண்மையை கட்டுப்படுத்தும் நோக்குடனும் அமெரிக்காவின் வாலாக செயற்பட்ட இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்த னேவுக்கு தலைவலி தர வேண்டியுமாய் இந்தியா ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங் களும் வழங்கியது. ஒரு குழுவென்றால் ஒருவேளை எதிர்காலத்தில் தங்கள் சொல் கேட்கும் எடுபிடி களாய் இருக்க மறுப்பார்கள் என்று கருதி பல போராளிக்குழுக்களை உருவாக்கி ஊக்குவித்து சகோதர யுத்தத்தில் களமிறக்கியது. தங்கள் சொற்படி நடக்காமல் தமிழீழக் கனவில் உறுதியாய் நின்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தை எரிச்சலூட்டும் தொந்தரவாகக் கருதியது. அவர்களை அழிக்க வேண்டி இந்திய ராணுவத்தை தமிழீழப் பகுதிகளுக்கு அனுப்பி சுமார் 15,000 அப்பாவித் தமிழ்மக்களின் படுகொலைக்கும் போராட்டம் பலவீனமடைதலுக்கும் காரணமாகி சுதந்திர இந்திய வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றாகிய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கும் வழிவகுத்தது. அது முதல் இன்றுவரை இலங்கை அரசுகள் நடத்திய மூர்க்கத்தனமான தமிழ் இன அழிப்பு யுத்தத்திற்கு ராணுவ உதவிகள் மட்டு மல்லாது முழுமையான ராஜதந்திர உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கியது. வேறெந்த நாடும் தமிழரின் உதவிக்கு வந்து விடாதபடி தடுத்ததும் இந்தியாதான். தமிழருக்கு நடந்த இனஅழித்தல் உண்மை வெளியே வந்துவிடாதபடி உலக அரங்குகளில் தடுத்து நிறுத்த உதவிக் கொண்டிருப்பதும் இந்தியாதான். சுருங்கக்கூறின் ஈழத்தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலில் இலங்கைக்கு எந்தளவு பங்கு உண்டோ அதனிலும் அதிகமாய் இந்தியாவுக்கு உண்டு. இதனை எடுத்துரைத்து கொள்கை மாற்றம் கொணர்வதுதான் உரையாடலின் அடிப்படையே.

ஆதலால், இந்தியாவுடன், ஆளும் காங்கிரஸ் அரசுடன், அக்கட்சியுடன் உரையாடித்தான் வேண்டும். இன அழித்தலுக்குத் துணை நின்ற உயர் ஜாதியினரா லும், கேரள மாநிலத்தவர்களாலும் நிரப்பப்பட்ட புதுடில்லி அதிகார அமைப்பினை கேள்விக்குள்ளாக்கி அதன் ஆத் மாவினை மீட்கத்தான் வேண்டும். அம்முயற்சி வெறும் முழக்கங்களால் மட்டுமே ஆகக் கூடியதல்ல. பன்முனை உத்திகள் வேண்டும். மிக முக்கியமாக அரசியல் ரீதியாக தமிழகத்தின் ஒன்றிணைந்த குரல் வேண்டும்.

sweetdreams1இந்தியாவின் சுமார் எட்டு சத மக்கள் தமிழர்கள். இம்மண்ணின் தனித்துவமான மொழி-பண்பாட்டு வர லாற்றுக்குச் சொந்தமானவர்கள். நமது உணர்வுகளுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட வழங்காத, அதுவும் இன அழித்தலுக்கே துணை நிற்கும் வெளியுறவுக் கொள்கை எதிர்கொள்ளப்பட்டே ஆக வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்கும் துறைகளில் குறிப்பிட்ட ஜாதியினர், மொழி யினர் குவிந்திருப்பதும் கேள்வி கேட்கப்பட்டு கூட் டாட்சித்தன்மையை பிரதிபலிக்கும் ஏற்பாடுகள் செய் யப்பட்டே ஆக வேண்டும். குறுகிய மொழி-இன-மாநில வெறுப்பு பிரச்சாரங்களுக்கு அப்பால் நின்று பொறுப் புணர்வுடன் இது செய்யப்பட வேண்டும். இவற்றில் தமிழகத்தின் ஒன்றிணைந்த நிலைப்பாடும், அதனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுகிற மாற்றமுமே தமிழீழத்திற்கான முதற்படி.

இலங்கை ராணுவத்தளபதி, சரத் பொன்சேகா தமிழகத் தலைவர்களை "அரசியற் கோமாளிகள்' என்றார். அவர் வெளிப்படையாகச் சொன்னார். புது டில்லியோ சொல்லாமல் அவ்வாறு நடத்தியது. உண்மை யில் இலங்கை இனப் பிரச்சனை தொடர்பான இந்தியா வின் கொள்கை வகுப்பில் தமிழகத்தின் எந்த அரசியற் கட்சியையும், தலைவர்களையும் புதுடில்லி அதிகார வர்க்கம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட மாட்டார்களென்பதும், இப்பிரச்சனையை வைத்து ஒருவரையொருவர் வீழ்த்தலாமா என்றுதான் பார்ப்பார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் நடந்ததும் அதுதான். எல்லாம் முடிந்து போகிற நேரம் நெருங்கிவிட்டது. தெரிந்தும் கூட அதை வைத்து தேர்தல் வெற்றி தோல்வியை மடை மாற்ற முடியுமா என்றுதான் நம் தலைவர்கள் இங்கு கணக்கிட்டார்கள். தம் பழி பாவத்திலிருந்து தம்மை கழுவிக்கொள்ள வேனும் அனைவரும் ஈழப் பிரச்சனையில் ஒரு குரலாய் முழங்க வேண்டும்.

காங்கிரசாரோடு உரையாடவேண்டுமெனக் கூறுவதற்கு காரணங் கள் இரண்டு. ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் மனது வைத்தால் ஒரு நாளில் வெளியுறவுக் கொள்கை மாறும், அப்படியே உலகக் கருத்தும் மாறும். இந்தக் கொள்கை மாற்றத்தை கொணர்வதில் தமிழக காங்கிரஸார் அமைதியான- தீர்க்கமான பங்காற்ற முடியும். ஈழத்தமிழ் மக்கள் அழிய வேண்டுமென விரும்புகிறவர்களுமல்ல அவர்கள். நீதியான தீர்வு அம்மக்களுக்கு வேண்டுமென மாநில காங்கிரஸ் தம் தலைமைக்கு உறுதியான வேண்டுகோள் வைத்தால் அதை முற்றாக தலைமை நிராகரிக்குமென நாம் நினைக்கவில்லை.

ஆதலால்தான் தமிழீழத்திற்கு ஆதரவான ஒத்த கருத்தினை தமிழகத்தில் உருவாக்குவது முதற்படி என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இரண்டாவது, இன அழித்தல் புரிந்த இலங்கையை உலக அரங்கில் தீண்டத்தகாத நாடாக ஆக்க வேண்டும். போரில் புலிகளை வீழ்த்தியதை விட இலங்கை அரசு பெற்றுவரும் பெருவெற்றி என்னவென்றால் இன அழித்தல் உண்மைகள் இன்றுவரை உலகின் கவனத்திற்கு வர முடியாதபடி தடுத்திருப்பதும், இன அழித்தல் குற்றங்களை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களை பேரளவு அழிப்பதில், அகற்றுவதில் பெற்றிருக்கும் வெற்றியும்தான். கொடுமை நடந்த முல்லைத்தீவு பகுதிக்கு இன்றுவரை உலக அமைப்பு எதையும் இலங்கை அனுமதிக்கவில்லை. மூன்று லட்சம் மக்கள் உயிர்வாழும் திறந்த வெளி கொலை முகாம்களுக்குக் கூட உலக அமைப்புகளை தங்குதடையின்றி இன்னும் அனுமதிக்கவில்லை. பெரும் கொடுமை, உலக அளவிலான நீதி விசாரணை நடத்த ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட சிறு முயற்சியினை முறியடிப்பதில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயற்பட்டு வெற்றிகண்டன. ஆனால் இவற்றை யெல்லாம் மீறி நாம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இன அழித்தல் (ஏங்ய்ர்ஸ்ரீண்க்ங்) என்பது வெறும் ஈழத்தமிழர் பிரச்சனையோ, துன்பமோ அல்ல. அது பொது மானுடம் சந்திக்கும் சவால். இருளுக்கும் ஒளிக்குமான பெரும் போர். இதில் நாம் தோற்றுப் போக முடியாது, கூடாது.

எல்லா தடைகளையும் கடந்து இன அழித்தல் கொடுமைகளை சட்ட விஞ்ஞான முறைகளின்படி பதிவு செய்ய டமஈக போன்ற அமைப்புகள், தமிழுணர்வும் மனிதநேயமும் கொண்ட பத்திரி கையாளர்கள், கற்றறிந்த தமிழ் அறிஞர்கள் ஒருங்கிணைந்து யூதர் களைப் போல் இயங்க வேண்டும். இன்றும்கூட ஹிட்லர் என்ற பெயரைச் சொல்லவே ஜெர்மானியர் கள் கூச்சப்படுகின்றனர். ஏனென்றால் ஹிட்லரின் கொடுமைகளை எழுத்து, ஒலி, ஒளி வடிவங்களில் பதிவு செய்து பொது மானுடத்தின் மனசாட்சி தளத்தில் மறுக்க முடியாதபடி பதிவு செய்ததில் யூத அறிஞர்கள் வெற்றி பெற்றார்கள். இங்கோவென்றால் சென்னையின் பெரிய மனிதர்களெல்லாம் இலங்கை தூதரகத்திற்கு மது விருந்து கொடுத்து பாராட்டு நன்றி விழாவெல்லாம் நடத்துகிறார்கள். இந்நிலை மாற வேண்டுமென்றால் இனஅழித்தலின் கொடூர உண்மைகளை தமிழுலகிற்கும் பொது உலகிற்கும் முழுமையாகப் பதிவு செய்ய வேண் டும். இன அழித்தலுக்கு பூரண துணையாளர்களாய் நின்ற சாமிகளும், ஞானிகளும் ராமர்களும் எவ்வளவு கேவலமானவர்கள், எப்படி தமிழ் இன அழித்தலின் பங்காளிகள் என்பது அப்போது வெளிப்படும். உண்மையில் இந்தியாவில் புதியதொரு கருத்துருவாக்க பாசிசத்தின் கருவிகளாய் மேலாதிக்க சக்திகள் கட்டுப்படுத்தும் ஆங்கில ஊடகங்கள் மாறி, சமூக-மனித நீதிக்கு பெரும் அச்சுறுத்தலாய் நிற்கின்றன. தமிழர் இன அழித்தலை நிரூபிப்பதன் மூலம் இவர்களின் அசிங்கமான முகங்களை தமிழ் வரலாற்றிற்கு, மனித குல வரலாற்றிற்குப் பதிவு செய்ய வேண்டும். இன அழித்தல் குற்றம் நிரூபிக்கப்படும் போதுதான் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படும். இப்போதைக்கு இலங்கையை காப்பாற்றி வருவது இந்தியா, சீனா மற்றும் இந்தியா வின் ஆங்கில ஊடகங்கள். ஆனால் இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கை மாறினால் பெரிதாக சீனா ஒன்றும் செய்துவிட முடியாது. இங்குள்ள ஆங்கில ஊடக மோசடிப் பேர்வழி களை தோலுரிக்கிற வேலையை நாமே செய் வோம்.

மூன்றாவதாய் பொருளாதார ரீதியாக இலங்கை பலவீனப்படுத்தப்பட வேண்டும். கிழக்கு திமோரை தன் காலடிக்குள் மிக நீண்ட காலம் இந்தோனேஷியா நசுக்கி வைத்திருந்தது. ஆனால் அதன் பொருளாதாரம் சிதைந்து நெருக்கடிக்குள்ளான காலத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியா மற்றும் மேற்குலக நாடுகள் கிழக்கு திமோர் சுதந்திரத்தை உறுதி செய்தன. லட்சக்கணக்கான ராணுவத்தினருக்குத் தீனி போடும் இலங்கை பொருளாதாரம் வெளிநாடுகளின் உதவியின்றி இயங்க முடியாது. இனஅழித்தல் குற்றத்தை அடிப்படையாக வைத்து இலங்கையின் தேயிலை மற்றும் பிற உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் பேரியக்கத்தை முற்போக்கு தொழிற்சங்கங்களின் துணையோடு உலக அளவில் தமிழர் கள் நடத்த வேண்டும். ராஜபக்சே அரசின் குற்றத்திற்கு சாமான்ய சிங்கள மக்களை தண்டிக்கலாமா என சிலர் கேட்கலாம். இன அழித்தல் என்பது சாதாரண குற்ற மல்ல. மனித குலத்திற்கெதிரான குற்றம். நீதி செய்யப் படவில்லையெனில் நாட்டு மக்கள் யாவருமே தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும். இனஅழித்தலுக் கான நீதியும், நீதியான அரசியல் தீர்வும் உறுதி செய்யப்படும் வரை இந்தியா கூட எல்லா நிதி உதவிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பொருளாதாரத்தில் என்று இலங்கை தடுமாறுகிறதோ அப் போதுதான் அது அரசியல் ரீதியாக அடிபணியும்.

வேலுப்பிள்ளை அவர்களுடனான உரையாடலில் ஒரு கட்டத்தில் ""நான்கு உலக நாடுகள் தனி ஈழத்தை அங்கீகரிப் போம் என வாக்களித்துள்ளார்கள். நாங்கள் யாழ்ப்பாணத் தை மீண்டும் கைப்பற்றும் போது அது நடக்கும்'' என்றார். அவை எந்த நாடுகள் என்று அவரிடம் நான் கேட்கத் துணிய வில்லை. ஆனால், அரசியல், பொருளாதார சூழல்கள் அமைந்து வருமெனில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீரிக்க உலகின் பல நாடுகள் முன்வரும் என நாம் உறுதியாக நம்பலாம்.

இன்னொன்றும் நடக்க வேண்டும். என்ன அது?

(நினைவுகள் சுழலும்)

0 Responses to ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com