தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான்,
’’இலங்கைப் பிரச்சனையில் ஒரே ஒரு தலைவன்தான் ஆதரவாகச் செயல்பட்டார். அதுதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
திருக்குறளை படிக்க பள்ளியில்லாத ஊரில் திருவள்ளுவருக்குச் சிலை தேவையா? சென்னையில் சர்வக்ஞர் சிலையை திறந்து வைத்து அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகின்றனர்.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு இருக்கா என்றும், தடை செய்யப்பட்டது சரிதானா? என்றும் வாக்கெடுப்பு நடத்தினால் 90%பேர் தமிழர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். அதை
நடத்த இந்த அரசு தயாரா?
சிங்களன் ஒருநாளும் திருந்தமாட்டான். ஏனென்றால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இந்தியாவை சீண்டிப் பார்ப்பான்.
உலகத்திலேயே மிகப்பெரிய ராணுவத்தை தனியொரு மனிதனாக பிரபாகரன் உருவாக்கி வைத்திருந்தார்.விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் வருவார். அதுவரை அமைதியாக இருங்கள்’’ என்று அவர் பேசினார்.
நன்றி, நக்கீரன்.
சிங்களன் திருந்தமாட்டான்;இந்தியாவை சீண்டிப் பார்ப்பான்-சீமான் பேச்சு
பதிந்தவர்:
தம்பியன்
30 August 2009
0 Responses to சிங்களன் திருந்தமாட்டான்;இந்தியாவை சீண்டிப் பார்ப்பான்-சீமான் பேச்சு