Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விஜய், விஜயகாந்த் போன்ற நடிகர்கள், ஈழப் பிரச்னைக்காக ஏதாவது போராட்டம் நடத்தியதுண்டா? என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூரில் நடந்த அக்கட்சிக் கூட்டதில் பேசிய அவர்,

தகுதியும் திறமையும் இல்லாத நடிகர்கள் இன்று அரசியல் பிரவேசம் செய்து வருகின்றனர். இவர்களில் எத்தனை பேர் சமூக முன்னேற்றத்திற்காக போராட்டம் செய்து சிறை சென்றனர் என, கூற முடியுமா? ஒரு சம்மன் அனுப்பியதற்கே கூச்சலிடும் விஜயகாந்த் போன்றவர்களால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும் என்பதை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விஜய், விஜயகாந்த் போன்ற நடிகர்கள், ஈழப் பிரச்னைக்காக ஏதாவது போராட்டம் நடத்தியதுண்டா? தகுதி, திறமை, சமூக அக்கறை இல்லாத நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால், கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது என்றார்.

நன்றி, நக்கீரன்.

0 Responses to ஈழப் பிரச்னைக்காக விஜய், விஜயகாந்த் ஏதாவது போராட்டம் நடத்தியதுண்டா?: பாமக

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com