இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை யாரும் தடுக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வளசரவாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ,
இந்தியாவில் முதல் சுதந்திர போர் 1857 ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1750களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவர் பூலித்தேவன்.
ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் பூலித்தேவன். பூலித்தேவன் வரலாறு புத்தகத்தில் இல்லை. இந்த இருட்டடிப்பை ஜெயலலிதா தலைமையில் நாங்கள் முறியடிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் இன்னும் தொடருகிறது. மத்திய மாநில அரசுகள் அங்கு நடப்பதை வேடிக்கைதான் பார்க்கிறார்கள். இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
0 Responses to ஈழம் மலர்ந்தே தீரும்; வைகோ