கடந்த சனிக்கிழமை இரவு, கொஸ்கம போலீஸ் பிரிவில் கடமையில் இருந்த ராணுவ சிப்பாய் ஒருவர் தூங்கியதைக் கண்ட இரண்டாம் லெப்டினட்ன் தர ராணுவ அதிகாரியான டபிள்யு. எம் ரட்ணசிறி, அவரைத் தட்டி எழுப்பியுள்ளார். இதன்பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன்போது சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதில் அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த சிப்பாயை அவருடைய டி 81 ரக துப்பாக்கியுடன் தாம் கைது செய்துள்ளதாக மேலும் போலீஸ் கூறியுள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



0 Responses to நித்திரையை கெடுத்த ராணுவ அதிகாரிகாயை சிப்பாய் சுட்டார்