Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெரும்பான்மை இனத்தவரால் பல காலம் தொட்டு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு உரிய நிலங்கள் அபகரிக்கப்பட்டு தற்போது இம் மாவட்டத்தில் பெருன்பான்மையாக முஸ்லிம்களும், அடுத்து சிங்களவர்களும், குறிப்பிட்ட சில பிரதேச செயலாளா; பிரிவுகளில் மட்டும் தமிழ் மக்களும் வழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் எப்படியாவது பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் அரச ஒட்டுக்குழு பொறுப்பாளர்களான இனிய பாரதி (கு.புஸ்பகுமாh), சீலன் போன்றோர்; அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் தங்களது அலுவலகங்களை திறந்து செயற்பட்டு வருகின்றனா.

கருணாவின் விசுவாசியாக இனியபாரதியும், கிழக்குமாகாண முதல் அமைச்சரான பிள்ளையானின் விசுவாசியாக சீலனும் செயற்பட்டு வருகின்றனர்;. இருவரும் தங்களுக்குள்ளே சிறு குழுக்களை வைத்துக்கொண்டு முரண்பட்டுக்கொண்டு அரசியல் பணிகளை முன்னெடுத்து விருகின்றனா;. இவர்களது சுயநலநோக்கமுள்ள அரசியல் செயற்பாடுகளால் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்கள் பலதரப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அண்மையில் பிள்ளையானின் சிபார்சின் மூலம் தொழில் கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் திருக்கோவில் நீர்ப்பாசனத்திணைக்களகத்தில் கடமையாற்றிய இரு உத்தியோகத்தர்கள் இனிய பாரதியின் குழுக்களால் தாக்கப்பட்டனர்.மேலும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பொத்துவில் பிரதான வீதியில் பிள்ளையானின் வேண்டுகோளிக்கிணங்க சீலனால் திறக்கப்பட்ட அலுவலகத்தை உடனே மூடுமாறு ஓர்ஆர்பாட்டத்தை நடாத்துவதற்கு அன்றாடம் தொழிலுக்கு செல்லும் தமிழ் பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு பலவந்தமாக அழைக்கப்பட்டனர். இதன்காரணமாக மக்கள் தங்களது அன்றாட வாழ்வாதார தொழில்களை மேற்கொள்ள முடியாத சுழ்நிலை ஏற்பட்டது.

அத்துடன், இனியபாரதி தனது பிரச்சார வேலைகளை மேற்கொள்வதற்காக ஆலய உட்சவ திருவிழாக்களில் தனது இசைக்கச்சேரியான “பாரதி ராகங்கள்” என்ற இசைக் கச்சேரியை இரவு நேரங்களில் நடாத்துமாறு ஆலய நிர்வாக சபையிடம் வற்புறுத்தி வருவதோடு கிராம அபிவிருத்திச் சங்களை, மகளிர்அபிவிருத்திச் சங்களை மேம்படுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனங்களால் அச் சங்கங்களுக்கு வழங்கப்படும் கட்டுமான ஒப்பந்த வேலைகளையும் பாரதியின் குழுக்கள் கிராமியச் சங்கங்களின் பெயரில் பொறுப்பெடுத்து தாங்களே அவ் வேலைகளை செய்து இலாபமடைந்து வருகின்றனர்.

மற்றும், 2009.09.10 ம் திகதி இனியபாரதி, அமைச்சர் நவரெட்ணராஜா போன்றோர்களை கொளரவிப்பு செய்வதற்காக என்று பாரதியின் குழுக்கள் பொதுமக்களிடமிருந்தும், அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியை அறவிட்டுள்ளதோடு முச்சக்கர வண்டி சாரதிகள் எவரும் தொழிலுக்கு செல்லாமல் அன்றை தின நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டனர்.

இவ்வாறாக, ஜனாதிபதியின் இணைப்பாளர் என்ற போலிப் பதவியை வைத்துக்கொண்டு பாரதியாலும், சீலனாலும் முரண்பாட்டுடன் மேற்கொள்ப்படுகின்ற கீழ்த்தரமான அரசியல் வேலைகளால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவதோடு, பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் விசனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஒட்டுக்குழுக்களால் தொல்லைகளை எதிர்நோக்கும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com