Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசாங்கத்தினால் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில் இத குறித்த தெரிவிக்கையில்:

வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உள்ள தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண முகாம்களில் உள்ள 6000 பேரை விடுதலை செய்வதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், இறுதியில் 580 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை கொண்டு செல்லப்பட்ட எதிலிகள் மீண்டும் அங்குள்ள பாடசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

0 Responses to தடுத்து வைக்கப்பட்ட மக்கள் விடுதலை செய்யப்பட்ட போதும், மாற்றப்பட்ட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com