தமிழனே உறங்காதே விழித்திரு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை நிறுத்து , என்று தன்னையே ஈகை ஆக்கிக்கொண்ட கொண்ட செங்கொடியின் வணக்க நிகழ்வும் இந்தியாவின் மனசாட்சியை தட்டி கேட்கும் படி இந்திய துதரகம் முன் பல நூற்றுகணக்கான மக்கள் சூழ இன்று நடைபெற்றது.
செங்கோடிக்கு ஈக சுடரேற்றி மலர் வணக்கத்துடன், இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் ஆனது.
சென்ற ஞாயிற்றுகிழமை பாரிசில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பிரான்சு வாழ் தமிழ் இளையோர் அமைப்பினர் மக்களிடையே கையெழுத்து சேகரிப்பு நடத்தி கொண்டிருந்த போது வந்து சேர்ந்தது 22 வயது தமிழிச்சி செங்கொடியின், "முத்துக்குமார் வழியில் ஈழத்தில் தமிழ் மக்கள் கொள்ளப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் தன்னையே தீப்பிழம்பாக்கி தமிழர்களேவிழித்தெழு என்றான், அதே வழியில் செங்கொடி இன்று கொலை வெறியர்களின் கைகளில் இருந்து தமிழனை காப்பாற்ற தமிழ் இனமே விழித்தெழு என்று கூறி தன்னை ஈகை ஆக்கிக்கொண்ட முதல் தமிழ் பெண்ணின் அர்ப்பணிப்பு" செய்தி எம்மை அதிர்ச்சியிலும் இந்த தியாகத்தினை இந்திய அரசிடமே எடுத்து காட்டவேண்டும் என்று இரண்டு நாட்களில் இந்திய துதரகம் முன் இந்தியாவே தூக்கு தண்டனையை ரத்து செய், மனித உயிர்களுக்கும் மனித நேயத்திற்கும் மதிப்பு கொடு என்று கேட்டு இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் சகல தமிழ் அமைப்புகளின் செய்பாட்டாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், பிரெஞ்சு உணர்வாளர்கள் கலந்து கொண்டு இந்திய மீண்டும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க வேண்டும்,காந்தி பிறந்த நாட்டில் காந்தி கூறியது போல் ஒரு கண்ணுக்கு இன்னொரு கண்ணை எடுப்பதால் உலகத்தையே குருடாக்கி விடும், எந்த குற்றத்திற்கும் மரண தண்டனை ஒரு தண்டனையாக இருக்க முடியாது என்ற கருத்துடன் பேசினார்கள்.
அத்துடன் 11 வருடங்களுக்கு முன் ஜனாதிபதிக்கு அனுப்பி வாய்த்த கருணை மனு இதுவரை காலமும் 3ஜனாதிபதிகள் மாறிய நிலையில் 11 வருடங்களுக்கு பின் இந்த கருணை இன்று நிரகரிக்கப்படத்தின் காரணம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். சிறி லங்கா அரசு மீது இனப்படுகொலை, போர் குற்றம் பற்றி இந்தியாவில் தொலை காட்சிகள் ஆவணங்கள் தயாரித்து வெளிக்கொண்டுவரும் நேரத்தில்,தமிழகம் எங்கும் இது சார்த்த போராட்டங்களும், அந்த போரரட்டம் தமிழ் நாட்டு எல்லையை தாண்டி லோக்சபா (இந்திய பாராளுமன்றம்) வரை போய் கொண்டிருக்கும் நிலையில், இந்த போராட்டத்தை திசை திருப்பவும், தமிழக அரசு சிறி லங்கா அரசுக்கு எதிராக எடுத்திருக்கும் தீர்மானங்கள் , தமிழ் மக்களின் சிந்தனையை திசை திருப்பும் செயல்பாடாகவே 11 வருடங்களாக தூசு பிடித்திருந்த கருணை மனுவை இந்திய காங்கிரஸ் அரசு கேட்டு கொண்டதுக்கு இணங்க இந்திய ஜனாதிபதி இந்த கருணை மனுவை நிராகரித்தார் என்று பல சர்வதேச மனித நேய அமைப்புகள் கூறி இருக்கின்றன. ஆகவே நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும், எமது போரரட்டங்கள் வலு பெறவேண்டிய நேரமிது, சிறி லங்கா அரசு இனப்படுகொலை செய்தது, செய்தும் கொண்டிருகிறது என்ற கருத்தை சகல ஆதரங்களுடன் முன்வைக்கும் அதே நேரத்தில் இந்திய அரசு மரண தண்டனையை நிறுத்தும் வரை எமது போரரட்டங்கள் வலுப்பெற வேண்டும், எந்த வகையிலும் எமது போராட்ட சிந்தனைகளில் இருந்து எம்மை திசை திருப்ப முடியாது என்ற கருத்து பட பேசப்பட்டது.
அத்துடன் கடந்த 3 தினங்களாக இந்திய ஜனாதிபதிக்கு 3 தமிழர்களின் கருணை மனு மீள் பருசீலளிக்க படவேண்டும் என்றும் கேட்டு மக்களிடம் பெறப்பட்ட பல்லாயிரக்கணக்கான கையெழுத்துகள் இந்திய ஜனாதிபதியிடம் கையளிக்கும் முகமாக இந்திய பிரான்சு நாட்டு துதரக அதிகாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தாம் அதை இந்திய ஜனாதிபதி அலுவலகதிற்கு அனுப்பிவைபதாக கூறினார்கள்.
அத்துடன் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் மனிதவுரிமை அமைப்பின் அமர்வு நடைபெற இருப்பதால், செப்டம்பர் மாதம் ௧௯ஆம் திகதி ஜெனிவாவில் ஒழுங்கு செயப்பட்டிருக்கும் சகல ஐரோபிப்பிய தமிழரின் போராட்டத்தில் நாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழர்கள் நாம் ஐக்கிய நாட்டு சபையிடம் கேட்கவேண்டும் என்றும் பிரான்சு நாட்டில் இருந்து நாம் பல்லாயிரக்கணக்காக கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.
எமது போராட்டம் வலு பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைக்கான பாதையில் நாம் பயணிப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டு இன்றைய போராட்டம் நிறைவு பெற்றது.
பாரிசில் இந்திய துதரகம் முன் பிரான்ஸ் மக்கள் போரரட்டம்! (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
03 September 2011



0 Responses to பாரிசில் இந்திய துதரகம் முன் பிரான்ஸ் மக்கள் போரரட்டம்! (படங்கள் இணைப்பு)