டென்மார்க்கில் 18-09-2009 அன்று தமிழ் மக்களால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. இப்பேரணியில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டனர்.
டென்மார்க் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தமிழ்மக்கள் வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை விடுதலை செய்ய உதவவேண்டும். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசிற்கு தண்டணை வழங்க வேண்டும்.
வவுனியாவில் உள்ள வதை முகாம்களை உடனடியாக மூடி அம்மக்களை அவரவர் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு டென்மார்க் அரசாங்கம் உதவவேண்டும், போன்ற சொற்கட்டுகளை எழுப்பினர்.
அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. தொல் திருமாவளவன் அவர்களின் உரையும் தொலைபேசி ஊடாக இடம்பெற்றது. இதில் அவர் தமிழ்மக்களின் விடுதலைக்கும் போராட்டத்திற்கும் தானும் தனது கட்சியும் தொடர்ந்தும் உழைப்போம் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
அத்துடன் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சிறப்புரையாற்றினார். அதன்பின்பு அங்கிருந்து ஊர்வலமாக அமைதியாக நடந்துசென்ற அம்மக்கள் அங்குள்ள நகரசபையைச் சென்றடைந்து, அங்கு அப்பேரணியை நிறைவுசெய்தனர்.
டென்மார்க்கில் பேரணி! நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டனர்
பதிந்தவர்:
தம்பியன்
19 September 2009



0 Responses to டென்மார்க்கில் பேரணி! நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டனர்