இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திருவாரூரில் பேசிய அவர்,
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல மாதங்களாகியும், இன்றும் தமிழ் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இந்த மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் ஆளும் அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நன்றி: நக்கீரன்
ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: என்.வரதராஜன்
பதிந்தவர்:
தம்பியன்
05 September 2009
0 Responses to ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: என்.வரதராஜன்