Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26.04.2013 அன்று 14:30 மணிக்கு யேர்மனி பிரான்க்புர்ட் நகரத்தில் இந்தியா துணைத் தூதரகத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது .

தமிழக மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்,சிங்கள பேரினவாத அரசு 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் மீது மேற்கொள்ளும் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் முகமாகவும் , ஈழத்தமிழர்கள் நிலத்திலும் புலத்திலும் தமது அரசியல் வேணவாவை தெரிவிக்கும் முகமாக தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பை வலியுறுத்தியும் இப் போராட்டம் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .

யேர்மன் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் தமிழின உணர்வோடு இப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் .

கவனயீர்ப்பு நடைபெறும் இடம் : இந்தியா துணைத்தூதரகம்
Friedrich- Ebert -Anlage 26
60325 Frankfurt a.M .

நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி.



0 Responses to யேர்மனியில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com