முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் ஐ.நா.சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி பொதுச் செயலாளர் லின் பாஸ்கோ வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில், இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு லின் பாஸ்கோவே சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அங்குள்ள மக்களுடன் அவர்களின் விருப்பங்கள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கோரிக்கையின் பேரில் அவர் தனது குழுவினருடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
இன்று கொழும்பில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாதுகாப்பு பற்றிய இலங்கை அரசின் கவலையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை விடவும் முக்கியமானது, இடப்பெயர்வு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைவரும் இயல்பு வாழ்க்கையை தொடங்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான். இடப்பெயர்வு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் இலங்கை அரசு விரைவில் விடுதலை செய்யவேண்டும் என்றார்.
நன்றி: நக்கீரன்
முகாமில் உள்ள தமிழர்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும்: இலங்கையிடம் ஐ.நா.அதிகாரி வற்புறுத்தல்
பதிந்தவர்:
தம்பியன்
18 September 2009



0 Responses to முகாமில் உள்ள தமிழர்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும்: இலங்கையிடம் ஐ.நா.அதிகாரி வற்புறுத்தல்