Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து "தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆயர்கள் கூட்டமைப்பு' சார்பில் சனிக்கிழமை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலய பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன்,

இலங்கை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை அவரவர் இருப்பிடங்களில் வாழ அனுமதிக்க வேண்டும். முகாம்களில் அவர்கள் சுதந்திரமாக இருக்க முடியடிவில்லை. முகாம்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு போதி வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு போதிய உணவுகள் கிடைக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அண்மைக்காலமாக தமிழ் மக்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்படுவதாகவும், இரக்கமின்றி தாக்கப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதைக் கண்டிக்கும் வகையிலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆயர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 19 ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் அன்றைய தினம் பார்வதிபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெறும்.

பின்னர், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பங்குத்தந்தைகள், அருள் சகோதரிகள் திரளாகக் கலந்து கொள்கின்றனர் என்றார்.

நன்றி: நக்கீரன்

0 Responses to ஈழத்தமிழர்களுக்காக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: ஆயர்கள் கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com