Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலத்தில் ரஷ்ய சிறப்புப் படையினரால் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு வன்னிக்குப் பயணம் செய்த ஓய்வுபெற்ற ஐந்து ரஷ்ய சிறப்புப் படை அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு, வாகனங்களை ஓட்டுதல், குறுகிய நேரத்திற்குள் வாகனங்களை பொருத்துதல் - கூறுகளாக அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்கியதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளில் தமிழீழ தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியை சேர்ந்த முப்பத்தைந்து பேர் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ரஷ்ய சிறப்புப் படையினர் பயிற்சி! சிறீலங்கா புலனாய்வுத்துறை தகவல்!!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com