Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா கொழும்பில் இருந்து வெளியாகும் 'த நேசன்' நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்பேட்டியில், ‘'முகாம்களில் நடைபெறும் கொலைகள், கடத்தல்கள், பாலியல் வன்முறைகள் தொடர்பாக தெரிவிக்கப்படும் உண்மைக்குப் புறம்பானவற்றை விட்டு விடுங்கள்.ஆனால், முகாம்கள் நரகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

14 வயதான தனது குழந்தையுடன் கடந்த நான்கு மாதங்களாக அந்த முகாமில் இருந்து அவதிப்பட்ட எனது உறவினர் ஒருவரைப் பொறுப்பெடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்பாக முகாமுக்குச் சென்றிருந்தேன்.நான் நினைத்திருந்தால் தொடக்கத்திலேயே அவர்களை வெளியே எடுத்திருக்க முடியும்.ஆனால் பின்கதவு வழியாகப் போவதற்கு நான் விரும்பவில்லை.

எனது மக்கள் அவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்கும்போது எனது உறவினர்களும் அவற்றை அனுபவிக்கட்டும் என நான் நினைத்தேன்.உறவினர்களைப் பொறுப்பெடுக்க முடியும் என்ற அரசின் புதிய திட்டத்தின் கீழ் அவர்களை நான் அந்த நரகத்தில் இருந்து மீட்க முடிந்தது.

தன்னால் முடிந்ததைச் செய்வதற்கு அரசு முயற்சிக்கிறது.அதனை மறுக்க முடியாது.ஆனால் அங்கு நிலைமைகளைச் சமாளிக்க முடியவில்லை.

அதனால்தான் நான் சொல்கிறேன், அவர்களை அங்கே தடுத்து வைத்திருப்பதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு இடமற்றவர்களை அரசு விடுவித்து விடலாம்.

அந்த முகாம்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பல்வேறு வழிகளின் மூலம் வெளியேறி விட்டார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன.அவர்களில் பலர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்றும் அவை தெரிவிக்கின்றன. அவற்றை யாரும் மறுக்க முடியாது.

கையூட்டு கொடுக்கும் மனநிலையில் யார் இருக்கிறார்களோ அவர்களால் தப்பிச் செல்ல முடிகிறது.ஆனால், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏனையவர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே, முகாம்களில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் பேரில் சிறு தொகையினரே, சரியோ தவறோ புலிகளுடன் தொடர்புடையவர்கள்.எனவே அவர்களை தவிர்த்து ஏனையவர்களை விடுதலை செய்ய வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to வன்னி முகாம்கள் பூமியின் நரகம்:யாழ் எம்.பி.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com