இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது.
இதை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை முழுவதும் பிரபாகரன் -சீமான் இணைந்து இருப்பது மாதிரியான தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. போலீசார் இவற்றை இரவோடு இரவாக அகற்றிவிட்டனர்.
இன்று கலந்துரையாடல் நடைபெறும் புதுக்கோட்டை மதுரை சாலையில் உள்ள எஸ்.எஸ்.மகால் முன்பு பிரபாகரன் -சீமான் இணைந்திருப்பது மாதிரியான படம் வைக்கப்பட்டிருந்தது.
டி.எஸ்.பி.சாமிநாதன் இந்த படத்தை அகற்ற உத்தரவிட்டார்.
கலந்துரையாடலுக்கு வந்த சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம் என்றனர் ஆவேசமாக.
பின்னர் டி.எஸ்.பி., சரி இங்கே மட்டும் படம் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் கலந்துரையாடல் நடக்கிறது.
நன்றி: நக்கீரன்
பிரபாகரன் படத்தை எடுக்கச்சொன்னால் தீக்குளிப்போம்:சீமான் ஆவேசம்
பதிந்தவர்:
தம்பியன்
20 September 2009



0 Responses to பிரபாகரன் படத்தை எடுக்கச்சொன்னால் தீக்குளிப்போம்:சீமான் ஆவேசம்