Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியவரும், இலங்கை ஒருமைப்பாட்டு அமைச்சருமான கருணா வின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அம்பாறையில் கிளை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில், கல்முனை, அம்பாறை மல்வத்த ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் 40 தமிழ் இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் மயங்கி விழுந்ததினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல அக்கரைபற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கருணா கட்சி அலுவலகத்தை அகற்றக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதில் மயக்கம் அடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் நிலை கலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனை உள்ள பகுதியில் அக்கரைபற்று, கோமாரி, கல்முனை திருக்கோவில் ஆகிய பகுதிகளின் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

0 Responses to கருணா கட்சி கிளை தொடங்க அம்பாறை மக்கள் எதிர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com