வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை விடுவிப்பதற்கு விரும்பும் உறவினர் நண்பர்கள் விண்ணப்பிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடைக்கலம் வழங்க விரும்புவோர் விசேட விண்ணப்பப் படிவமொன்றை பூர்த்தி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக உறவினர்கள் மற்றும் ஏனையோர் அகதி முகாமில் உள்ள நபர்களுக்கு அடைக்கலம் வழங்க விரும்பினால் அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சிற்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அடைக்கலம் வழங்க விருப்பம் தெரிவிப்போர் குறித்த நபர்களுக்கு தேiவாயன உணவு, உடை மற்றும் இருப்பிடங்களை வழங்குவதாக உறுதியளிக்க வேண்டுமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விண்ணப்பப் படிவங்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வது மற்றும் அவற்றைப் பூர்த்தி செய்வது குறித்த தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
தொலைபேசி இலக்கங்கள்
0094112 395524
0094112 395512
நன்றி: அதிர்வு
அகதி முகாம் மக்களை விடுவிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க முடியும் - அரசாங்கம்
பதிந்தவர்:
தம்பியன்
10 September 2009



0 Responses to அகதி முகாம் மக்களை விடுவிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க முடியும் - அரசாங்கம்