ஈழத்தமிழர்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து தாம் எதையும் பெற்றதில்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பட்டியலில் விஜயகாந்த் பெயரையும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழின படுகொலையை நிகழ்த்தியதால் உலக நீதிமன்றத்தின் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. உட்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த அரசின் சார்பில் தகவல்கள் பெறும் சுப்பிரமணிய சாமியின் நிலையை கண்டு பரிதாபப் பட வேண்டியிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை பற்றிய விசாரணையில் தமது பெயர் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டாலே சுப்பிரமணிய சாமிக்கு போதுமானது.
அரசியலில் இருப்பதை காட்டிக்கொள்ள சுப்பிரமணிய சாமி வீண் விளம்பரம் தேட வேண்டாம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
நன்றி: நக்கீரன்
விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றேனா? சு.சாமிக்கு விஜயகாந்த் கண்டனம்
பதிந்தவர்:
தம்பியன்
10 September 2009



0 Responses to விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றேனா? சு.சாமிக்கு விஜயகாந்த் கண்டனம்