இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். நேற்று அவர் இது தொடர்பாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று ஊடக வியலாளர்களிடம் கூறியவை வருமாறு:
நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாததால் நாம் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். தேசிய பிரச்சினை தீர்க்கப்பட்டு சர்வதேச தலையீடுகளும் நிறுத்தப்பட்டால் மாத்திரமே எமது நாடு முழுமையாகச் சுதந்திரமடைந்த நாடாக மாறும்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச தமிழர் எழுச்சியை நசுக்கினார். அது இங்கு பெரிய வெற்றியாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால், தமிழர்கள் இப்போது தாயகத்தை இழந்து கையேந்தி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் பிடிக்குள் எமது பொருளாதாரம் சிக்கியுள்ளது. எமது நாடு இந்தியாவின் காலனித்துவ நாடாக மாறியுள்ளது. தொழிலாளர்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் நோக்கில் நான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்றார்.

0 Responses to விக்கிரமபாகு கருணாரட்ணவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்