பதிந்தவர்:
தம்பியன்
26 November 2009
முன்னாள் இராணுவத் தளபதியும்,
முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரியு மான ஜெனரல் சரத் பொன் சேகா சட்ட விரோதமாக 110
பாதுகாப்புப் படையினரையும், 26
வாகனங்களையும் தம்வசம் வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
அவரிடம் உள்ளவர்களில் 103
இராணுவ வீரர்களும், 07
இராணுவ அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
ஜெனரல் சரத் பொன்சேகாவால் கோரப்பட்ட எண்ணிக்கையிலான படைவீரர்கள் அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளதுடன் ஐந்து பெண் படை உறுப்பினர்கள் மட்டும் வழங்கப்படவில்லை.
இதேவேளை கூடுதலாக அவரிடம் தங்கியுள்ள ஏனைய வீரர்களை அவரவரின் சொந்தப்படையணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படும் கூற்று அடிப்படையற்றது எனக்கூறினார்.
பாதுகாப்புப்படையின் உயர் அதிகாரியாராவது ஒருவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக புலனாய்வுப் பிரிவால் அறிவிக்கப்பட்டால்,
உடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக்குறிப்பிட்ட அவர் இதுவரை இவ்வாறான தகவல் எதுவும் கிட்டவில்லை என மேலும் தெரிவித்தார்.
இப்படிக்கூறுகிறார் இராணுவப் பேச்சாளர்
0 Responses to சரத் பொன்சேகாவிடம் சட்டவிரோதமாக வாகனங்களும் படை வீரர்களும்!