யாழ் - கண்டி பிரதான வீதியான ஏ-9 சீரான மக்கள் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதும் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள் படையினர் சோதனை சாவடியில் தமது பயண விவரங்களை பதிவு செய்து, அனுமதி அட்டை பெற்று பயணம் செய்யும்முறையே அமுலில் உள்ளது. அத்துடன், வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பயணிகள் வாகனத்தில் இராணுவத்தினரும் சேர்ந்து பயணம் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள ஏ-9 வீதி காலை 7 மணி முதல் மாலை 3.30 மணி வரையில் மாத்திரமே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு தனியார் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் இவ்வாறு பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு ஒரு தடவை பயணத்துக்கு 200 ரூபா அறவிடப்படுகிறது. தனியார் வாகன உரிமையாளர்களிம் அறவிடப்படும் இந்த பணத்தை 138 ரூபாவாக - முன்னர் அமுலில் இருந்தவாறு - குறைக்கவேண்டும் என்று தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான சொகுசு வாகன பயணத்தை அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்க்கட்சியினரே நடத்திவருகின்றனர் என்றும் இந்த உரிமை தனியார் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ஏ- 9 வீதி திறக்கப்பட்டாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்: பயணிகள் விசனம்