Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ரார்ஸ்பூர்க் நகரத்தில் உள்ள St Vincent de Paul மண்டபத்தில்,
20.12.09 அன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில்தேசத்தின் குரல்அன்ரன் பாலசிங்கம் அவர்களினது மூன்றாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், “தேசத்தின் குரல்படிப்பகத்தினால் 19.12.2009 அன்று நடாத்தப்பட்ட, பொதுஅறிவுத் தேர்வில் பங்கு கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றிருந்தது.

நிகழ்வில் முதன்மை விருந்தினர் தர்மலிங்கம் சத்தியதாசன் (ஆசிரியர்) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். அகவணக்கம், தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனை, மலர்வணக்கம் ஆகிய நிகழ்வினைத் தொடர்ந்துதேசத்தின் குரல்”; படிப்பகத்தினால் நடாத்தப்பட்ட பொது அறிவுத் தேர்வில் பங்கு கொண்ட சிறுவர், சிறுமியர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பொது அறிவுத் தேர்வில் முப்பத்து மூன்றுக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டிருந்ததுடன், இந்த வருடத்தில் அதி மேற்பிரிவில் அன்னையர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முதன்மை விருந்தினர் தர்மலிங்கம் சத்தியதாசன் (ஆசிரியர்) அவர்கள் வெற்றியீட்டிய சிறுவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதள்களையும், வழங்கியதுடன் பொதுத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டமுடியாத சிறுவர்களுக்கு பாராட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பாலா அண்ணாவின் நினைவு சுமந்த உரையும் அத்துடன் பாலா அண்ணாவின் நினைவுப்பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

இதே நேரம்தேசத்தின் குரல்படிப்பகமானது, “தேசத்தின் குரல்”; கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று (14.12.2007) திறப்புவிழா செய்யப்பட்டிருந்ததுடன், இந்தப் படிப்பகத்தில் தமிழ், ஆங்கில மொழிப் பொத்தகங்களும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

stbala1
stbala2
stbala3

0 Responses to பிரான்ஸ்: ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் “தேசத்தின் குரல்” நினைவு வணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com