Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது கணவருக்கு தற்போது நல்ல காலம் என்று சோதிடர்கள் கூறியிருப்பதாக பொன்சேகாவின் மனைவி கூறியுள்ளார். அவர் அரச தலைவர் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவார் என்றும் பொன்சேகாவின் மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.

தனது கணவரின் ஜாதகத்தை அண்மையில் சோதிடர்களிடம் காண்பித்து அவரது கிரகநிலைகள் குறித்து கேட்டதாகவும் அதற்கு சோதிடர்கள் அவருக்கு தற்போது நல்ல காலம் ஆரம்பித்துள்ளதாகவும் இனிவரும் காலத்தில் அவரது முயற்சிகள் எல்லாம் பலிக்கும் என்றும் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றும் கூறினார்கள் என்று தெரிவித்தார்.

பொன்சேகாவின் மனைவி அனோமா ஊனமுற்ற படைவீரர்களுக்கான அமைப்பின் தலைவராக பதவி வகித்து அண்மையில் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to எனது கணவருக்கு இனி நல்ல காலம்: பொன்சேகாவின் மனைவி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com