தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சபீர்அலி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது,
கடந்த 27 ந்தேதி விடுதலைப்புலிகள் மாவீரர் தினத்தை கொண்டாடியதாக தமிழ்நாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
அன்று வடசென்னையில் வைகோ பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. அதில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் படம் வைக்கப்பட்டு இருந்தது. எனவே வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டைரக்டர் சீமான் விடுதலைப்புலிகளை தொடர்ந்து ஆதரித்து பேசி வருகிறார். தன்னை விடுதலைப்புலி என்றே பகிரங்கமாக அறிவித்து உள்ளார். அவரது அலுவலகம் விடுதலைப்புலி அலுவலகம் போல செயல்படுகிறது. வீட்டில் பிரபாகரன் படம் வைத்து உள்ளார். தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகள் உள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 Responses to வைகோ, சீமான் மீது நடவடிக்கை: போலீசிடம் காங்கிரஸ் மனு