இந்நிகழ்வில் வானம்பாடிகள் இசைக்குழு வழங்கிய தமிழீழ எழுச்சிப் பாடல்களும் தேசியத்தலைவரின் வாழ்த்துப் பாடல்களும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் தமிழகத்திலிருந்து செந்தமிழன் சீமான் தொலைபேசியூடாக சிறப்புரையாற்றினார்.
அத்துடன் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோபாலசாமி, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் ஆகியோர் வழங்கியிருந்த தேசியத்தலைவருக்கான வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.
பெருமளவிலான மொன்றியல் வாழ் தமிழீழ உறவுகள் தங்கள் தலைவன் பிறந்தநாள் தமிழன் நிமிர்ந்தநாள் எழுச்சிவிழாவில் உறுதியுடன் பங்கெடுத்திருந்தனர்.




0 Responses to " இருப்பாய் தமிழா நெருப்பாய்" எழுச்சிவிழா கனடா மொன்றியலில்