Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தவை ஆதரிக்க சொல்கிறார் கருணா(ய்)

பதிந்தவர்: தம்பியன் 01 December 2009

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தற்போதைய அதிபர் ராஜபக்சேவையே ஆதரிக்க வேண்டும் என்று தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா கோரிக்கை விடுத்துள்ளார்.


விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று இயக்கத்தை காட்டிக்கொடுத்தவர் என்றும், துரோகி என்றும் விமர்சிக்கப்பட்ட கருணா ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை ஆதரித்து தமிழர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ள கருணா, "வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ராஜபக்சேவுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும், மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் கருணா கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ராஜபக்சேவையே ஆதரிப்பார்கள் என உறுதியுடன் தெரிவித்தார்.

ராஜபக்சே தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர். அவர் நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர். சரத் பொன்சேக்கா போன்றோர் முற்றிலுமாக இராணுவப் பின்னணியைக் கொண்டவர். இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்க மாட்டார்கள்" என்றும் அவர் மேலும் கூறினார்.

0 Responses to மகிந்தவை ஆதரிக்க சொல்கிறார் கருணா(ய்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com