எத்தனையோ தடைகளையும் சவால்களையும் சந்தித்த தலைவர் பிரபாகரன் அவர்கள் தற்போதுள்ள தடைகளையும் தாண்டி வெளியே வருவார் என அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் காணொலி ஊடாக உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு தடவைகள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக செய்தி வெளியிட்டார்கள். பிரபாகரன் சாவோடு வாழ்ந்தவர். அவரது வழிகாட்டலை ஏற்று தொடர்ந்தும் விடுதலை பயணத்தை முன்னெடுங்கள் என அவர் அப்போது வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்தும் தனதுரையில் யாழ்ப்பாணத்திலிருந்து 05 இலட்சம் தமிழர்களோடு - 1995 இல் - வெளியேறிய தலைவர் சரியான தருணத்தில் முன்னேறி ஆனையிறவு உட்பட பல தளங்களை வெற்றி கொண்டார். ஒவ்வொரு இழப்புக்களின் பின்னரும் புதுவீச்சோடு எழுந்துவருவதே தலைவரின் வரலாறு எனவும் அதேபோல புதுஎழுச்சியோடு அவர் வருவார் எனவும் தெரிவித்தார்.
அக்காணொளியின் முழுமையான இணைப்பை கீழே காணலாம்.

நன்றி: ஈழநேஷன்
0 Responses to தேசியத் தலைவர் பத்திரமாக இருக்கிறார். விடுதலைப்பயணத்தை தொடருங்கள் - பழ. நெடுமாறன்