பதிந்தவர்:
தம்பியன்
22 December 2009
தடுப்பு முகாங்களில் அல்லல்படும் தமிழ் மக்களை நிரந்திரமாக விடுவிக்கக்கோரியும்,
அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான பொருளாதார உதவிகளை உலக நாடுகள் முன்வந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டியும்,
போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரியும்,
பிரித்தானிய தமிழீழ மாணவர்களால் இலண்டன் மத்திய பகுதியில் உள்ள தொடருந்து நிலையங்களில் கடும் பனி,
மழை ,
குளிரையும் பொருட்படுத்தாது துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
சில முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
அதனையும் தாண்டி மாணவர்களும்,
இளையோர்களும் தங்களுடைய பணியை செவ்வனே செய்து வருகின்றார்கள்.
இனியும் தொடர்ந்தும் எவ்வித இடர்கள் வரினும் அயராது தேசத்தின் விடிவிற்காய் உழைப்போம் என உறுதிகொண்டுள்ளனர்.




0 Responses to பிரித்தானியத் தமிழீழ மாணவர்களின் துண்டுப் பிரசுர கவனயீர்ப்பு போராட்டம்