"ஆட்சி மாற்றத்துக்காக, பொன்சேகாவை தமிழ்க் கூட்டமைப்பும் ஆதரிக்க வேண்டும்" என்ற தலைப்பில் நேற்று வெளியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனின் அறிக்கையின் மிகுதிப் பகுதி இங்கே பிரசுரமாகின்றது.
தார்மீக உரிமை
பல்லாண்டுகளாகநமது மக்கள் சொல் லொணாத் துன்பங்களை அனுபவித்து நிற்கும் பொழுது நாம் நமது மக்களுடன் இருந்து கொண்டிருக்கின்றோம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் எமது கடமையை உறுதியுடன் செய்துவந்துள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பேரினவாதிகளுக்கு துணைபோனது கிடையாது. நமது ஜனநாயக மக்கள் முன்னணி தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ் மக்களை நாடிவரும் கட்சியல்ல என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார் கள். எனவே தமிழ் மக்களுக்கு வழிகாட்டுவதற்கும், கோரிக்கை விடுப்பதற்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கின்றதாக நாங்கள் நம்புகின்றோம்.
நான்கு சாத்தியங்களில் இதுவே நடைமுறை சாத்தியமானது
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் முன்னால் நான்கு சாத்தியங் கள் இருப்பதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிப்பது, ஆளுங்கட்சி கூட்டணிக்கு வாக்களிப்பது, பொது தமிழ் வேட்பாளரை நியமித்து வாக்களிப்பது, தேர்தலை பகிஷ் கரிப்பது ஆகியவை
பகிஷ்கரிப்பு எங்களுக்கு உடன் பாடானது அல்ல
கடந்த ஜனாதிபதித் தேர்தல் கால கட்டத்திலிருந்து இன்றுவரையும் தேர்தல் பகிஷ்கரிப்பை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இந்நிலையில் நாங்கள் வாக்களித் தாலும், வாக்களிக்கா விட்டாலும் கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும் அணியின் அதிகாரம் தமிழ் மக்கள் மீது பாதிப்பை செலுத்துகின்றது. இந் நிலையில் எமது வாக்களிப்பின் மூலமாக அந்த அதிகார அணியை இயன்ற வரையில் எமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையின்றி இனிமேலும் இருக்கமுடியாது. இங்கே போட்டி யிடும் இருவருமே இராவணர்கள் தான். இந்த இராவணர்களில் பெரிய இராவணன் யார்? சின்ன இராவணன் யார்? என்று சிந்தித்து முடிவு செய்யவேண்டிய நிலைமையில் தமிழ் இனம் இருக்கின்றது. இதைத் தவிர நடைமுறை சாத்தியமான மாற்றுவழிகிடையாது. மனசாட்சிப் படி மக்களை வாக்களிக்கக் கோரமுடியாது. தமிழ் மக்களிடம் தமது சொந்த விருப்பத்தின்படி வாக்களியுங்கள் எனக் கூறிவிட்டு எமது கடமையில் இருந்து நாம் நழுவ முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களுக்கு தலைமைத்துவம் வழங்கி வழிகாட்டவேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் நிறைவேற்றுவோம். ஏனைய தமிழ் கட்சிகளும் மக்களுக்குத் தெளிவாக வழிகாட்டவேண்டும் என நாம் கோருகின்றோம்.
சர்வதேச சமூகம்
கடந்த பல தசாப்பதங்களாக தமிழ் மக்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலமாகவும், ஆயுத போராட்டத்தின் மூலமாகவும் உலகத்திற்கு தமது அபிலாசைகளை மீண்டும் மீண்டும் எடுத்து கூறியிருக்கின்றார்கள். மலை யக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிலிருந்து, சிங்களம் மட்டும் சட்டம், தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் உள்ளிட்டு நடந்து முடிந்த போரின் இறுதிக்காலக் கட்டங்களில் நமது மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப் பட்டது வரை, அனைத்தையும் இந்த உலக சமுதாயம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. சர்வதேச சமூகமும், குறிப்பாக இந்திய அரசு எதுவும் தெரியாத அப்பாவிகள் என எவரும் சொல்ல முடியாது. தமிழ் மக்களின் மீதான கொடுமை களுக்கு சர்வதேச சமூகம் மிகப் பெரும் பதிலை வரலாற்றுக்கு சொல்லியே ஆகவேண்டும். எமது மக்கள் தொடர்பில் இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்பது மறுக்கப்படமுடியாத உண்மை. எனவே எமது ஜனநாயக செயற் பாட்டிற்கு இந்தியாவும், சர்வதேச சமூகமும் துணை வருவதை வரவேற் போம். ஆனால் எமது எதிர்காலத்தை முழுமையாக சர்வதேச சமூகத்திடம் மாத்திரம் ஒப்படைத்து விட்டு நாம் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது. உலக சமுதாயத்திற்கு எடுத்துக் கூறுகின்றோம் என்று சொல்லி எமக்குரிய சந்தர்ப்பங்களை நாம் கைநழுவிவிட முடியாது.
இன்றைய அரசு
இன்றைய அரசுக்கு வாக்களிப் பதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு காரணமும் கிடையாது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும் இந்த அரசு தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தையும் இந்த அரசு தவறவிட்டு விட்டது. தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இன்று இந்த அரசுக்குள்ளேயே தமிழ் கட்சிகளுக்கும், சிங்கள தீவிரவாத கட்சிகளுக்கும் இடையில் முரண் பாடுகள் முற்றியுள்ளன. இந்தியா விடம் ஒன்றும், ஏனைய சர்வதேச சமூகத்திடம் ஒன்றும், சிங்கள மக்களிடம் ஒன்றும், தமிழ் மக்களிடம் ஒன்றும் என மாற்றி, மாற்றி பேசி தமிழ் மக்களின் வாழ்க்கையையும், மண்ணையும் அபகரிக்கும் நோக்கம் இந்த அரசின் அடிப்படை வேலைத் திட்டமாகும். இன்று எதையாவது சொல்லி தமிழ் மக்களின் வாக்கு களையும் வாங்கி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களது நோக்கம். இவர்களது ஆட்சி தொடருமானால் பல இனங்களுக்கும், பல மதத்த வர்களுக்கும் சொந்தமான நமது நாடான இலங்கை ஒரே இனத்திற்கும், ஒரே மதத்தவருக்கும் மாத்திரமே சொந்தமான நாடாக விரைவில் மாற்றப்படும். இது ஒன்றே இந்த அரசின் ஒரேயொரு அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.
எதிர்க்கட்சி பொது வேட்பாளர்
சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதா னது எமது வரலாற்று கடமையல்ல. அது நாம் வாழுகின்ற காலத்தின்கட்டாயமாகும். சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு அணியிடமும் உறுதியளித் துள்ளார். கடந்தகால ஜனாதிபதிகளின் இத்தகைய உறுதிமொழிகளுக்கும், தற்போதைய நடைமுறைக்கும் இடையில் இருக் கின்ற வேறுபாடுகள் சிந்திப் பவர்களுக்கு புரியும். கடந்த முறைகளில் ஜே.வி.பி மாத்திரமே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை எதிர்த்தது. இன்று ஏறக்குறைய எல்லாக் கட்சிகளும் இதை எதிர்கின்றன. சரத் பொன்சேகா பாரம்பரிய அரசியல்வாதியல்ல. அவருக்கு அரசியல்கட்சி கிடையாது. அவர் இராணுவ வீரராக இருந்துள்ளார். தமிழ் மக்களை பொறுத்தவரையிலே இராணுவ ஆட்சி என்பது புதியதோர் அனுபவமல்ல. ஆனால் அது சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு புதிய விடயமாகும். எனவே இராணுவ ஆட்சி ஏற்படும் சாத்தியம் கிடையாது. இது அரசின் கட்டுக்கதையாகும்.
13ஆவது திருத்தமும், தேசிய இனப்பிரச்சினையும்
பொது வேட்பாளர் சரத்பொன்சேகா 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என பகிரங்கமாக கூறியிருப்பது நல்ல விடயம். இந்த நிலைப்பாடு கூட இதுவரையில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் கூறவில்லை. சரத்பொன்சேகா தான் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதாக அவரே உறுதியளித்துள்ள காரணத்தினாலே அவர் இடைக்கால ஜனாதிபதியாகலாம். எனவே தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்கப் போகின்ற இன்றைய ஆளுங் கட்சியின் வேட்பாளர் தான் தமது தீர்வுத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும் ஆளுங்கட்சியிடம் இன்று ஆட்சி இருக்கின்ற காரணத்தினாலேயே அவர்கள் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை. 13ஆவது திருத்தத்தை முழுமையாக உடன் அமுல்செய்துவிட்டுஅதற்குப்பிறகு 13ஆவது திருத்தத் திற்கு அப்பால் அரசாங்கம் செல்ல வேண்டும். அதே வேளையில் இனப்பிரச்சினை தீர்வை ஜனாதிபதி சரத்பொன்சேகாவிடம் நாம் விட்டு விடப் போவதில்லை. அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறவிருக் கும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாகும் தேசிய அரசின் முதற் கடமை தேசிய இனப்பிரச்சினைக் கான தீர்வாகும்.
சரத் பொன்சேகாவிடம் நாம் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடுகள்
ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜே.வி.பிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுத்து சர்வகட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிப்பார். பொதுத் தேர்தலை தொடர்ந்து புதிய அரசு உருவாகும் வரைக்கும் இந்த காபந்து அரசு செயற்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படும். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும். 17ஆவது திருத்தம் நடைமுறையாக்கப் பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் உடன் நியமிக்கப்படும். உடனடியாக எரியும் பிரச்சினைகளான தமிழ், முஸ்லிம் அகதி மக்களின் மீள்குடி யேற்றம், சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் வாடும் தடுப்பு கைதிகள் விவகாரம் ஆகியவை தொடர்பில் இரண்டு தேசியசபைகள் நிறுவப்படும். நமது மக்கள் தமது சொந்தக் கிராமங்களில் சென்று குடி யேறுவதை மக்கள் பிரதிநிதிகள் கண்காணிப்பார்கள். அதேபோல் நீண்டகால கைதிகளுக்கு பொது மன்னிப்பு, துரித சட்ட நடவடிக்கை, புனர்வாழ்வு ஆகியவை உடனடியாக முன்னெடுக்கப்படும். இந்த விவ காரங்கள் தொடர்பில் நான் நேரடியாகப் பங்களித்து கண் காணிப்பேன் என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தமிழ் மக்கள் மீதான கொடுமை..இந்தியாவும் சர்வதேசமும் வரலாற்றுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்