இராணுவத்தினர் பயணிகளை சோதனையிடும் நடவடிக்கையில் நேற்றுக் காலையில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் தமது கடமைகளுக்காக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றவர்கள் அனைவரும் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்றன. இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். காலை 9 மணிக்குப் பின்னர் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.



0 Responses to திடீர்ச் சோதனைக்குள்ளான சுன்னாகம், மல்லாகம் பகுதி