களுத்துறை நகரில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் புகைப்படம் கடந்த 29ஆம் திகதி இனந் தெரியாத சிலரால் அகற்றப்பட்டமைக்கு எதிராக..
களுத்துறை நகரில் நேற்றுமுன் தினம் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சரத் பொன்சேகாவின் புகைப்படத்தை ஏந்திய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதர வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ் மன் விஜேமான, மாகாண சபை உறுப்பி னர் பி.டி.அபேரத்ன தலைமையில் களுத் துறை நகரில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், பொன்சேகாவின் படத்தைத்தாங்கியவாறு களுத்துறை நகரில் பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான, யுத்தத்தின் மூலம் நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினரின் படங்களை அழிப்பதற்கு அரச தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். ஆயிரக் கணக்கான சிங்களவர்களைக் கொலை செய்த கருணா, பிள்ளையான் போன்றவர்கள் தற்போது அமைச்சர்களாக இருக்கின்றனர் எனவும், இன்று அவர்கள் தேசப்பற்றாளர்களாக மாறியிருப்பதுடன், நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினர் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர் எனவும் விஜேமான கூறினார்.

0 Responses to பொன்சேகாவின் படம் அகற்றப்பட்டது