துப்பாக்கிக் குழாயிலிருந்து இப்போதைக்கு ஈழம் மலரவில்லைதான். ஆனால் அது அமைதிப் பூங்காவில் பூக்கப் போகிறது. சர்வதேசச் சூழ்நிலைகள் சரியாக அமைந்து வருகின்றன என்று தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் குமுதம் சஞ்சிகைக்கு எழுதிய பத்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்."ஈழம்: இந்தியா மாறியது ஏன்?" என்ற தலைப்பில் அவர் எழுதிய முழுமையான கட்டுரை வருமாறு:-
ஈழ மக்களின் இணையற்ற தலைவர் பிரபாகரனின் மறைவை இலங்கை அரசு உறுதி செய்திருக்கிறது.அப்படி ஒரு செய்தியைப் பெறுவதற்கு டெல்லி ரொம்ப ஆவல் கொண்டிருந்தது.தாயக லட்சியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மரணம் ஏது?
அன்றைக்கு அன்னை இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்தார். மலையகத் தமிழர்களுக்குக் கூட வாக்குரிமை இல்லை. எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு ஈழத்தமிழர்கள் பொட்டுப் பூச்சிகளாக நசுக்கப்பட்டனர்.
`அண்டை நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதனை விவாதிக்க வேண்டும்' என்று நாடாளுமன்றத்தில் மதுலிமாயி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது தி.மு.க. உறுப்பினர்களான சி.டி. தண்டபாணியும் மாயத்தேவரும் ஈழத்தின் நாதமாகவே முழங்கினார்கள்.
அன்றைக்கு இந்திரா அளித்த பதில் சாசனமாகவே அமைந்திருந்தது. சிங்கள அதிபர் ஜெயவர்த்தனே டெல்லிக்கே ஓடிவந்தார். `இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் அளிக்கப்படும். எதுவும் செய்துவிடாதீர்கள்' என்று மன்றாடினார்.
`எதுவும் செய்துவிடாதீர்கள்' என்றால் என்ன பொருள்? இன்றைய பங்களாதேஷான அன்றைய கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வங்காளிகள்தான். அவர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவியிருக்கலாம். ஆனால் மொழியால், பண்பாட்டால் ஒருகூட்டுப் பறவைகள்.
எனவே, கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்குப் போராடிய முக்தாவாகினி படையினருக்குப் பின்னே இந்திய ராணுவம் சென்றது. அதேபோல ஈழம் மலர எதுவும் செய்துவிடாதீர்கள் என்று கேட்பதற்காகத்தான் ஜெயவர்த்தனே வந்தார்.
அன்றைக்கு திருகோணமலையில் அமெரிக்க ராணுவதளம் அமைவதாக இருந்தது. `இந்தியாவுக்கு அருகில் எந்த ராணுவதளம் அமைவதையும் விரும்பமாட்டோம்' என்று இந்திரா எச்சரித்தார். அந்தத் திட்டத்தையே அமெரிக்காவும் கைவிட்டது. இலங்கையும் கைகழுவியது.
இனி இந்தியாவிற்குத் தென்திசையிலிருந்துதான் அச்சுறுத்தல் வரும் என்பதனை இந்திரா உணர்ந்திருந்தார். எனவே, ஈழம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணினார். ஆகவேதான் அவர் ஈழப் போராளிகளை ஆதரித்தார். ஜெயவர்த்தனே சந்தேகம் கொண்டது போல் அவர் பிரபாகரனுக்கு மகுடம் சூட்டக் காத்திருந்தார். இன்றைக்கு அதே மாவீரனின் மரணச் செய்திக்கு டெல்லி காத்திருந்தது.
அன்றைக்கு கொழும்பு டெல்லிக்கு ஓடிவந்தது. இன்றைக்கு டெல்லி கொழும்பிற்கு ஓடுகிறது.
இனி இலங்கையில் அமெரிக்க ராணுவ தளமும் அமையும். சீன கப்பற்படைத் தளமும் உதயமாகும். அப்போதுதான் ஈழத்தின் இழப்பு எவ்வளவு பெரிய பேரிழப்பு என்பது நமக்குப் புரியும்.
1983-ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் சிங்கள ராணுவத் தாக்குதல்கள் அதிகரித்தன. அப்போது போராளிக் குழுக்கள் பலம் பெறவில்லை. எனவே, அவர்கள் தமிழகம் வந்து சேர்ந்தனர்.
அப்போது நாட்டின் பிரதமர் இந்திரா காந்தி. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஆயினும், போராளிக் குழுக்களை இணைக்க ஒரு பக்கம் எம்.ஜி.ஆர். முயன்றார். இன்னொரு பக்கம் கலைஞர் முயன்றார். இருவரது முயற்சியும் முழுப் பலன் தரவில்லை.
அமரர் எம்.ஜி.ஆர். சித்தாந்தக் குழப்பங்களில் சிக்கிக் கொள்வதில்லை. சுயாட்சியா? தன்னாட்சியா? தனி நாடா? என்றெல்லாம் அவர் குழப்பிக் கொண்டதில்லை. தனி ஈழம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்பது என்று முடிவு செய்தார்.
முதலில் ஆண்டன் பாலசிங்கம் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். `ஏன் பிரபாகரனை அழைத்து வரவில்லை' என்பதுதான் அவர் கேட்ட முதல் கேள்வியாகும். அடுத்த சில தினங்களில் பிரபாகரன் வந்தார். அவரிடம் கேட்ட முதல் கேள்வி, `நீங்கள் ஏன் கலைஞரைச் சந்திக்கவில்லை' என்பதுதான்.
`அண்ணே, எல்லாக் குழுக்களையும் விடுதலைப்புலிகள் என்றே இங்குள்ள ஏடுகள் குறிப்பிடு கின்றன. மக்கள் குழம்பிப் போகிறார்கள். தம்பி (பிரபாகரன்) தலைமையில் இயங்குவதுதான் விடுதலைப்புலிகள் இயக்கம் என்பதனை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்' என்றார் பாலசிங்கம்.
`என்ன செய்ய வேண்டும்?' எம்.ஜி.ஆர். கேட்டார்.
`ஈழம் தொடர்பான பேட்டிகளில், உரைகளில் தாங்கள் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் எங்களை ஆதரிக்கிறீர்கள் என்பது தெரிந்தால் கடல் கடந்த ஈழ மக்கள் கூட கரைபுரளும் உற்சாகம் கொள்வர். ஈழத்திலும் எழுச்சி ஏற்படும்.'
அடுத்த நாள் காலையில் எம்.ஜி.ஆரிடமிருந்து எமக்கு அழைப்பு வந்தது. அப்போது நாம் அவருடைய `அண்ணா' நாளிதழின் பொறுப்பாசிரியன். விவரம் சொன்னார்.
காலை பதினொரு மணிக்கு `அண்ணா' அலுவலகத்திற்கு `பேபி' வந்தார். அவருடைய உண்மையான பெயர் சுப்பிரமணியம். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் வரிசையில் அவர் நான்காவது இடத்தில் இருந்தார்.
அன்றிலிருந்து அண்ணா நாளிதழின் முகம் மாறியது. விடுதலைப்புலிகள் இயக்கத் தகவல்கள்தான் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றன. `பிரபாகரன் தலைமையில் இயங்கும் விடுதலைப்புலிகள் இயக்கம்' என்றே குறிப்பிட்டோம்.
இதற்கு மத்தியில் ஆங்கில நாளிதழ் அதிபர் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். விடுதலைப்புலிகளைத் தவிர வேறு குழுக்களை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கோரினார். அவர் சிங்கள அரண்மனையின் செல்லப்பிள்ளை என்பது அவருக்குத் தெரியும்.
எல்லா ஈழப்போராளிக் குழுக்களும் பயிற்சி பெற பிரதமர் இந்திரா உதவினார். அதில் விடுதலைப்புலிகள் 600 பேர் மட்டும்தான் பயிற்சி பெற்றனர். தங்கள் வீரர்களில் இரண்டாயிரம் பேராவது பயிற்சி பெற விரும்புகிறோம் என்று பாலசிங்கம் எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார்.
`அவ்வளவுதானா?' என்றார் எம்.ஜி.ஆர்.
தமிழக மலைஅடிவாரங்களில் பயிற்சி பெற எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். மக்களுக்குத் தொல்லையில்லாது பயிற்சிகள் அமைய வேண்டும் என்பதனை அவர் தெளிவுபடுத்தினார்.
எந்த அரியணையில் அமர்ந்து அமரர் எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகளை சொந்தச் சகோதரர்களாக அணைத்துக் கொண்டாரோ, அதே அரியணையிலிருந்து அவரது மறைவிற்குப் பின்னர் ஒரு பேய்க்குரல் கேட்டது.`பிரபாகரனை இரும்புச் சங்கிலிகளால் கட்டி இழுத்து வாருங்கள். தூக்கில் போடுங்கள்' என்று அந்தக் குரல் டெல்லி நோக்கி அலறியது.
ஈழமக்களுக்கு எதிரான சிங்களப் பகைப்புலத்தை சந்திக்க புலிகள் இயக்கம்தான் சரியான சேனை என்பதில் இந்திராவும் எம்.ஜி.ஆரும் ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தனர். எனவே, பொய் முகங்கள் காலப்போக்கில் கரைந்து போயின.இதர போராளிக் குழுக்கள் வலுவிழந்தன.
காலங்கள் மாறின. அன்னை இந்திரா அமரரானார். அவருடைய மறைவு நமக்கு மட்டுமல்ல, ஈழமக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ராஜிவ்காந்தி நாட்டின் பிரதமரானார். ஈழப்பிரச்னையில் அவரும் சரியான பாதையிலேயே ஆரம்பத்தில் பயணித்தார். புத்தத்தைப் போதித்த சிங்களத்தை இனவாத அரசு யுத்தத்தின் கொலைக்களமாக்குவதை அவரும் விரும்பவில்லை. எப்படி ஈழப் பிரச்னையில் இந்திராவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் கருத்தொற்றுமை இருந்ததோ, அதேபோல ராஜிவிற்கும் எம்.ஜி.ஆருக்கும் இணக்கமான உறவுகள் இருந்தன.
சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்காணிக்க ராமேசுவரம் கடற்கரையில் இந்தியப் போர்க் கப்பல்கள் மிதக்கும் என்று இந்தியா எச்சரித்தது.
1985-ம் ஆண்டு பெங்களூருவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு வந்த ஜெயவர்த்தனே பிரதமர் ராஜிவ்காந்தியைச் சந்தித்தார். `சிங்களத்தில் தனி ஈழம் மலர்ந்தால் தமிழகமும் தனிநாடாகும். அது இந்தியாவிற்குத்தான் ஆபத்து' என்றார். அதனை ராஜிவ் காந்தி நம்பினார். வஞ்சகம் விரித்த வலையில் அவர் வீழ்ந்தேவிட்டார்.
அவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர் இந்திய வெளியுறவுச் செயலாளர் வெங்கடேசுவரன். `என்றும் தமிழகம் தனி நாடாகாது' என்று அவர் ராஜிவிடம் வாதாடினார். ஆனால் ஜெயவர்த்தனே விதைத்த நச்சுவிதை நன்றாகவே முளைவிடத் தொடங்கியது.
இலங்கை - ஈழப்பிரச்னையில் அன்னை இந்திராவின் ஆலோசகராக, தூதுவராக இருந்தவர் ஜி.பார்த்தசாரதி. நேர்மையானவர். அவரைக் கண்டாலே ஜெயவர்த்தனேக்கள் நெற்றிக்கண்ணைத் திறப்பார்கள். கொழும்பு குலைநடுங்கும். ராஜிவிற்கும் அவரே ஆலோசகராகத் தொடர்ந்தார். ஆனால், ஜெயவர்த்தனே அவரை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ராஜிவ் பணிந்தார். பாதை மாறிய பயணம் ஆரம்பமானது.
அதன்பின்னர் ரொமேஷ் பண்டாரி என்பவர் ஆலோசகரானார். அவருடைய மனைவிக்கு சிங்கள அரசு வைர நெக்லஸ் பரிசளித்ததாக மும்பை ஏடுகள் பரபரப்பாக சேதிகள் தந்தன.
எம்.ஜி.ஆருக்கும் ஜி.பார்த்தசாரதிக்கும் நல்ல உறவு இருந்தது. அவர் எம்.ஜி.ஆரை (1985 ஏப்ரல்) சந்தித்தார். இரண்டு மணிநேரம் கலந்துரையாடல். விடுதலைப் புலிகள் முன்னேறித் தாக்குகிறார்கள். சிங்கள ராணுவம் சிதறி ஓடுகிறது. இந்த நிலையில் இந்தியாவைத் திசைதிருப்ப ஜெயவர்த்தனேக்கள் எப்படி சதி செய்கிறார்கள் என்பதனை விளக்கினார். எனவே, ஈழப்பிரச்னையில் இறுதிவரை எம்.ஜி.ஆர். தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடைய ஆலோசனைகளை ராஜிவ் காந்தியால் மீறமுடியவில்லை.
சிங்களப் பேரினவாதத்தின் கர்ப்பத்திலிருந்து ஈழம் பிறக்கும் என்ற நிலை உருவானது. அதுவரை அழைத்தாலும் வர மறுத்த ஜெயவர்த்தனே பணிந்தார். எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது அவரது கவலை. புலிகளை கொசுக்களைப் போல் ஒழிப்பேன் என்று கொக்கரித்தவர்தான்.
ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே ஈழப் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முடியாது என்று ஜெயவர்த்தனே அந்தர்பல்டி அடித்தார். கூர்ந்து பார்த்தால் ஓர் உண்மை புரியும். அவர்கள் ஈழத்து மயானத்தில் சங்கீத கச்சேரி நடத்துவார்கள். முடியவில்லை என்றால் முட்டி மோதி டெல்லிக்கு ஓடி வருவார்கள். போர் நிறுத்தம் என்பார்கள். மீறுவார்கள். புலிகள் மீது பழி போடுவார்கள்.
இலங்கைக்கு இந்தியத் தூதராக ஜே.என்.தீட்சித் பொறுப்பேற்றார். `வைர நெக்லஸ்' பண்டாரி எப்படி ஜெயவர்த்தனேக்கு சீடரானாரோ, அதேபோல் இந்த தீட்சித்தும் இன்னொரு சீடரானார். ஒரே ஒரு நிகழ்வை நினைவுபடுத்துவோம். பிரபாகரனை டெல்லிக்கு அழைத்து வரச் சென்ற ராணுவத்தினரிடம் `பிரபாகரனை சுட்டுக் கொல்லுங்கள். மேலிட உத்தரவு' என்றார்.
சிவசங்கரமேன னும் இலங்கையில் இந்தியத் தூதராக இருந்தவர்தான். இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த ஈழத் தமிழர்கள் அவரைச் சந்திக்க முயன்றார்கள். ஒரு முறை கூட அவர் அதற்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. விடுதலைப்புலிகளின் கடல் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இந்தியா - இலங்கைக் கடற்படையின் கூட்டு ரோந்து தேவை என்று திருவாய் மலர்ந்ததும் அவர்தான். அவர் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரானார்.
இப்போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் எம்.கே.நாராயணன். இந்திய ராணுவம் ஈழத்தில் இறங்கியபோது நமது உளவுத்துறைத் தலைவராக இருந்தவர். இவர்கள்தான் ஈழப்பிரச்னையில் ராஜிவ் காந்திக்கு வழிகாட்டிகளாக அமைந்தனர். இலங்கைப் பிரச்னை தீர ஈழத்தைச் சிலுவையில் அறைய வேண்டும் என்பது இவர்களது கோட்பாடு.
சிங்கள ராணுவம் தினம் தினம் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தும். வான்வெளியிலிருந்து குண்டுகள் போடும். ஆயிரமாயிரமாக ஈழ மக்கள் பலியாவார்கள். அந்தப் படுகொலைகளை இவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால், புலிகள் திருப்பித் தாக்கினால் `பயங்கரவாதம்' என்று அலறுவார்கள்.
போர்க்களத்தில் புலிகளை வெல்ல முடியாது என்ற நிலை வந்தபோது, உடன்பாடு காண ஜெயவர்த்தனே முன் வந்தார். அதன் மூலம் புலிகளைப் பணிய வைப்பதுதான் ராஜிவ் காந்தியின் நோக்கமாகும். அந்த உடன்பாட்டைத் தயார் செய்ததே நமது `ரா' உளவு நிறுவனம்தான்.
பிரபாகரனை அழைத்து வர இந்திய ராணுவ ஹெலிகொப்டர்கள் ஈழத்திற்குப் பறந்தன. அப்போதுதான் பிரபாகரனைச் சுட்டுக் கொல்லும்படி இலங்கைத் தூதர் தீட்சித் தெரிவித்தார். இது பதிவு செய்யப்பட்ட செய்தியாகும்.
டெல்லி வந்த பிரபாகரனை உடன்பாட்டில் கையெழுத்திடும்படி நிர்ப்பந்தித்தனர். அப்போது எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்தார். உடன்பாடு உண்மையிலேயே ஈழமக்களுக்குக் கரம் கொடுக்கும் என்று அவர் நம்பினார். உடன்பாட்டில் பிரபாகரன் கையெழுத்திட்டார். அடுத்த நாள் அவரும் பிரபாகரனும் மூன்று மணி நேரம் எதிர்காலத் திட்டம் பற்றி கலந்துரையாடினர்.
உடன்பாட்டை ஏற்க மாட்டோம் என்று இலங்கைப் பிரதமர் பிரேமதாசா அறிவித்தார். புலிகளின் நிலைகள் மீது சிங்கள ராணுவம் திடீர்த் தாக்குதல்கள் நடத்தியது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் இறங்கியது.
இந்தியாவை - ராஜிவ்காந்தியை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால், அந்த ஆயுதங்களை ரகசியமாக இதர நோஞ்சான் போராளிக் குழுக்களுக்கு இந்திய ராணுவம் வழங்கியது.
போர் முனையில் பணிய வைக்க முடியாத புலிகளை, சமாதானம் என்று சரணடைய வைப்பதுதான் உட்பொருள் என்பதனை அடுத்து நடந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்தின. எம்.ஜி.ஆர். அதிர்ந்து போனார்.
உடன்பாட்டின்படி சிறைகளிலிருந்த மூவாயிரம் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்ய ஜெயவர்த்தனே மறுத்தார்.
சிங்களத்தோடு தமிழும் ஆங்கிலமும் ஆட்சி மொழி என்று அறிவிக்க வேண்டும். ஆனால் சிங்களம் மட்டும்தான் என்று பிரகடனம் செய்தார்.
உடன்பாட்டைத் தொடர்ந்து சென்னையில் இயங்கிய தங்கள் அலுவலகத்தை புலிகள் மூடினர். அவர்களுக்குப் பொது மன்னிப்பு உண்டு. அதனை நம்பி புலேந்திரன், குமரப்பா உள்பட 17 இளம் தலைவர்கள் பயணமாயினர். இந்திய அமைதிப்படையிடம் தெரிவித்துவிட்டுத்தான் சென்றனர். ஆனால், நடுக்கடலில் சிங்கள ராணுவம் அவர்களைக் கைது செய்தது. இதுதானா உடன்பாடு என்று ஈழம் அதிர்ச்சி அடைந்தது. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பிரபாகரன் டெல்லியின் கதவுகளைத் தட்டினார். இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர். முயன்றார். டெல்லி மௌனம் சாதித்தது. ஓர் இயக்கத்தின் எதிர்காலத் தலைமுறையை இந்தியாவால் காக்க முடியவில்லை. அந்த 17 வீரர்களும் பகைவனிடம் மண்டியிட மறுத்து, களச்சாவை சந்தித்தனர்.
மூன்றே மாதங்களில் புலிகளை ஒழித்து பிரபாகரனைக் கைது செய்துவிடலாம் என்பதுதான் ரகசிய உடன்பாடு. இரண்டு ஆண்டுகளாகியும் இந்தக் கனவு நிறைவேறவில்லை. `பிரபாகரனைக் கைது செய்ய முடியாத இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்' என்று பிரேமதாசா எச்சரித்தார். எவ்வளவு பெரிய தலைகுனிவு?
பல நூறு தமிழச்சிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்பட்டார்கள். இந்திய ராணுவம் புலிகளை வேட்டையாட ஆரம்பித்தது. எட்டிய தூரத்தில் இரண்டு முறை பிரபாகரன் பிடிபடாமல் தப்பினார்.
`இந்திய ராணுவமும் புலிகளும் போரிட்டு அழிகிறார்கள். நமது வீரர்கள் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்' என்று பிரதமர் பிரேமதாசா கைகொட்டிச் சிரித்தார்.
தங்களுக்கு வந்த சவாலை தாங்கள்தான் சந்திக்க வேண்டும். இந்திய அவதார புருஷர்கள் உதவிக்கரம் நீட்ட மாட்டார்கள். வேடிக்கை பார்ப்பார்கள் என்பது ஈழ மக்களுக்கும் புலிகளுக்கும் புரிந்தேவிட்டது. உடன்பாடு என்று நம்பி மோசம் போனோம் என்று நொந்து போனார்கள். ஆனாலும் இறக்குமதி செய்துகொண்ட ஆபத்திலிருந்து எப்படியோ தப்பினார்கள்.
காலப்போக்கில் கருணா என்பான் இனத் துரோகியானான். சிங்களத்தின் சேவகனானான். அவனை முன்னிறுத்தியே கிழக்கு மாநில புலிகள் முகாம்களை சிங்கள ராணுவம் அழித்தது.
ஒருபக்கம் இனத் துரோகம் இன்னொரு பக்கம் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா, இஸ்ரேல், சீனம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர்க்களத்தில் அணிவகுத்தன. ஒரு வெண்புறாவை வேட்டையாட எத்தனை எத்தனை வல்லூறுகள்?
எனவே,துப்பாக்கிக் குழாயிலிருந்து இப்போதைக்கு ஈழம் மலரவில்லை-தான். ஆனால் அது அமைதிப் பூங்காவில் பூக்கப் போகிறது. சர்வதேசச் சூழ்நிலைகள் சரியாக அமைந்து வருகின்றன. அப்போது சந்தனப் பேழையில் உறங்கும் எம்.ஜி.ஆர். கண்விழித்து ஆசீர்வதிப்பார்.
நன்றி: ஈழநேஷன் இணையம்

0 Responses to ஈழம் மலர்வதற்கான சர்வதேச சூழ்நிலை சரியாக அமைந்துவருகிறது: சோலை