Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு சீனா ரூ.1,800 கோடி நிதி உதவி!

பதிந்தவர்: தம்பியன் 26 December 2009

இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை கருவூலத்துறை அமைச்சர் ஜெயசுந்தரே சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக இலங்கைக்கும்,​​ சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

இலங்கையில் இன்னும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்,​​ அதற்கு சீனாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் உதவி ஆகியவை குறித்தும் ஜெயசுந்தரே இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறினார்.

இலங்கை எதிர்ப்பாக்கும் அனைத்து உதவிகளை செய்ய சீனா தயாராகவுள்ளதாக சென் ஜியான் உறுதியளித்துள்ளார்.​

இந்தச் சந்திப்புக்குப் பின் சீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்த சந்திப்பின்போது மகிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு,​​ நாட்டின் உள்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்துவதற்கும்,​​ மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டுவருகிறது. அதற்கு சீனா அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கைக்கு சீனா ரூ.1,800 கோடி நிதி உதவி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com