Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றியை பங்கிட்டுக் கொள்வதில், யார் முன்னணியில் திகழ்வார் என்பதே தற்போதைய கேள்வியாக காணப்படுவதாக டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாகவும் மாற்றும் பொருட்டே முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளதாக டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், யுத்தம் வெற்றிக்காணப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியின் நிழற்படங்கள் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டு வந்தமையே இந்த தேர்தல் அறிவிப்புக்கான முதல் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சரத் பொன்சேகாவே, ஜனாதிபதியை எதிர்த்துப் போட்டியிடக்கூடிய தகுதி வாய்ந்தவர் என எதிர்கட்சிகள் கருதியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, மகிந்த ராஜபக்ஷ யுத்த வெற்றிகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்கையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பிரசாரம் பெறகூடிய தன்மை சரத் பொன்சேகாவுக்கே காணப்படுகின்றமையே காரணம். இந்த நிலையிலேயே எவ்வித பின்புலமும் இல்லாமல், இராணுவ வீரர் என்ற அடிப்படையில் மாத்திரம் சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா சுமார் 40 வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றிவந்துள்ளார். அவர் தமது 19 வயதில் இராணுவத்தில் இணைந்துக் கொண்ட அதே ஆண்டில் தான், மகிந்த ராஜப்கஷ முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கும் தெரிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளை அழித்த பெருமை இரண்டு பேருக்கும் இருக்கின்ற போதும், அவர்களில் இந்த பெருமைய அரசியல் மயப்படுத்துவதில் யார் முதன்மை பட்டு வெற்றிப்பெறுவார் என்பதே தற்போதைய கேள்வி என டைம்ஸ் தெரிவித்துள்ளது

0 Responses to யுத்தவெற்றியை பங்கிட்டு கொள்வது யார்? : டைம்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com