"தேசப்பற்றாளர்கள் என்று நினைத்துக்கொண்டு சில தேசத்துரோகிகளை எனது அரசின் உயர்பதவிகளில் நியமித்து கடந்த காலத்தில் ஒருசில தவறுகளை இழைத்துவிட்டேன்" - என்று சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -
"தேசப்பற்றாளர்கள் என்று நினைத்துக்கொண்டு நான் சில தேசத்துரோகிகளை அரசின் உயர் பதவிகளில் நியமித்தேன். அப்போது எனக்கு அது தெரியவில்லை. ஆனால், இப்போது அதனை நான் புரிந்துகொள்கிறேன். அவர்கள் தற்போது தமது தனிப்பட்ட நலன்களுக்காக தாய்நாட்டுக்கு துரோகமிழைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இது மிகவும் கவலைக்குரிய விடயம்.
"எனது அரசை அமைக்கும்போது உயர்பதவிகளிலெல்லாம் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து நியமித்தேன். ஆனால், சில சந்தர்ப்பங்களில் எனது மனக்கணக்கு பொய்த்துப்போய்விட்டது. நாட்டுக்கு கிடைக்கவேண்டிய உலக வங்கி கடனை தடுக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தடுக்கிறார்கள். இவற்றை துரோகம் என்றழைக்காமல் எப்படி கூறமுடியும்?" - என்றார்
நன்றி: ஈழநேஷன்

0 Responses to "தேசத்துரோகிகளை தேசப்பற்றாளர்கள் என்று எண்ணி ஏமாந்துவிட்டேன்": கவலைப்படுகிறார் மகிந்த ராஜபக்ச