Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் நடைபெறும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வில் பொதுச்சுடர் காலை 11.00 மணிக்கு ஏற்றப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முரண்பாடின்றி, உணர்வுபூர்வமாக சகல மக்களையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் விருப்பமும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனால் அழைப்பு விடுத்து அறிக்கையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி காலை 11.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்படும் போது, இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் எங்கிருந்தாலும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலங்களில் ஆத்மசாந்தி பூஜைகளிலும் ஈடபட முடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வர்த்தக நிலையங்களை மூடி தமது ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் வர்த்தகர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். தனிப்பட்ட ரீதியில் கைகளில் கறுப்புக்கொடிகளைக் கட்டி தமது துயரத்தை வெளிப்படுத்தலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காலை 07.00 மணிக்கு சைக்கிள் பேரணியை ஆரம்பித்து பிரதான சுடர் ஏற்றப்படும் இடத்தினை வந்தடைவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய துயர் நாளை, உணர்வுப்பூர்வமாக நினைவுகூர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com