
இராணுவ தளபதியாக பதவி வகிக்கும் போதே சரத் பொன்சேகா மறைமுகமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் எதிர் கட்சிகளுடன் நெருக்கமான தொடர்புகளை பேணியதாகவும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர் கட்சிகளின் அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்யும் மகமான இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் பல நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களின் விரிவான மீள் குடியேற்றத்திற்கு பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து சரத் பொன்சேகா தடைகளை ஏற்படுத்தி வந்ததாகவும் அதன் காரணமாகவே இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்பட்டதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.
0 Responses to அரசாங்கம் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு பொன்சேகாவே காரணம் - கோததபாய